திருச்சி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று மாலை பல இடங்களில் பலமாகவும், பல இடங்களில் மிதமாகவும் மழை பொழிந்தது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மாவட்டங்களில் அரை மணி நேரம், மயிலாடுதுறையில் 1 மணி நேரம், தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மாலை 6 மணி முதல் 8 மணி வரை, புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் பிற்பகலில் 1 மணி நேரம் மழை பொழிந்தது. மற்ற இடங்களில் மழை இல்லை.
தஞ்சை மாவட்டத்தில் சாலியமங்கலம், திட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை மற்றும் மயிலாடுதுறையில் பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளன. எனவே இந்த நீரை வௌியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், இந்த பயிர்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். டெல்டாவில பல இடங்களில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.