வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மணை வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராணிக்கு நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமம் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (08 ம் தேதி) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்,96 திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் உடல் பரிசோதனை நடத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் ராணி இரண்டாம் எலிசபெத்தை லிஸ்டிரஸ் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, லிஸ் டிரசை பிரதமராக ராணி எலிசபெத் அறிவித்தார். பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்க உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement