'பொன்னியின் செல்வன்' டிரைலர் வரவேற்பு எப்படி ?
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த டிரைலர் வெளியானது. நள்ளிரவு நேரத்தில் டிரைலரை வெளியிட்டதால் பலரும் நேற்று காலையில் எழுந்த பிறகுதான் டிரைலரைப் பார்த்தார்கள். அதனால், 24 மணி நேர சாதனை என்பது இந்த டிரைலருக்குக் கிடைக்கவில்லை. விஜய், அஜித் படங்களின் டிரைலர்கள் தான் அடுத்தடுத்து சாதனைகளைப் படைக்கும். அந்த சாதனைகளை 'பொன்னியின் செல்வன்' டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாரான வரவேற்பை கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஆடியோ உரிமையை தென்னிந்தியாவில் அதிக பிரபலமில்லாத கம்பெனியிடம் விற்றதே இதற்குக் காரணம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அந்நிறுவனத்தின் யு டியுப் கணக்கில் ஹிந்தியில் மட்டுமே அதிக 'சப்ஸ்க்ரைபர்' இருக்கிறார்கள். இருப்பினும் ஹிந்தியில் கூட இதுவரையில் 34 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது.
தமிழில் 75 லட்சம் பார்வைகளும், தெலுங்கில் 24 லட்சம், மலையாளத்தில் 9 லட்சம், கன்னடத்தில் 1 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதே சமயம் இந்த வருடத்தில் தமிழிலும் பெரிய வசூலைப் பெற்ற 'ஆர்ஆர்ஆர்' டிரைலர் தமிழில் இதுவரையில் 1 கோடியே 47 லட்சம் பார்வைகளையும், 'கேஜிஎப் 2' டிரைலர் 2 கோடியே 74 லட்சம் பார்வகைளயும் பெற்றுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'பாகுபலி 2' டிரைலர் அப்போதே 2 கோடியே 74 லட்சம் பார்வைகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது.
'பொன்னியின் செல்வன்' டிரைலர் மேலே குறிப்பிட்ட படங்களின் பார்வைகளை விட தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் பார்வைகளைப் பெற்றால்தான் படத்தின் வரவேற்புக்கு முத்தாய்ப்பாக இருக்கும்.