கொரோனா தாக்கங்களில் ஒன்றுதான் எங்கு சென்றாலும் தடுப்பூசி சான்றிதழ் கேட்கும் நடைமுறை. கொரோனா நோய்த்தொற்று பிறருக்கு பரவிட கூடாது என்பதற்காக பொது இடங்களில் கேட்க துவங்கி,
தற்போது ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு சென்றால் கூட அங்கும் தடுப்பூசி சான்றிதழ் கேட்கும் வழக்கம் உண்டாகிவிட்டது. நேர்காணல் பதற்றத்தில் எப்படி அந்த சான்றிதழை டவுன்லோட் செய்வது என்று கூட மறந்திருப்போம். கவலைய விடுங்க அதற்கான எளிய வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு நியாபக படுத்துகிறோம்.
Step 1 : முதலில் நீங்கள் MyGov கொரோனா உதவிமையத்தின் எண்ணிற்கு 9013151515 வாட்ஸப் வழியாக ஹாய் போன்று ஒரு மெசேஜை அனுப்புங்கள்.
Step 2 : உடனே ஆட்டோமேட்டிக் மெசேஜ் வசதி மூலம் அது உங்களுக்கு இரண்டு பதில்களை தரும். அதில் கேட்கும் cowin சேவைகள் அல்லது digilocker சேவைகள் என எதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு 9 ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
Step 3 : அதில் உங்களுக்கு covid அறிகுறிகள் இருந்தால் என்ன செய்வது முதல் சமீபத்திய கோவிட் அப்டேட் வரை எல்லாம் கிடைக்கும். அதில் இரண்டாவது இடத்தில் download vaccination certificate என்று இருக்கும்.
Step 4 : நீங்கள் “2” என்று டைப் செய்து சென்ட் செய்ய வேண்டும்.
Step 5 : மீண்டும் உங்களுக்கு 5ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் மீண்டும் “2”ஐ டைப் செய்து அனுப்ப வேண்டும்.
Step 6 : உங்களது வாட்ஸப் எண்ணிலேயே தொடரலாமா அல்லது வேறு ஏதும் நம்பரை கொடுத்திருக்கிறீர்களா என்று கேட்கும். அதே நம்பர் என்றால் எண் “1”ஐ டைப் செய்து அனுப்பவும்.
Step 7 : பின் உங்கள் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை அப்படியே டைப் செய்து அனுப்பவும்.
Step 8 : உங்கள் எண் மூலமாகவே உங்களின் குடும்பம் மட்டும் நண்பர்களுக்கு சேர்த்து ரெஜிஸ்டர் செய்திருந்தால் அவர்களில் யாருக்கு சான்றிதழ் வேண்டும் என்று கேட்டு பெயர் பட்டியலை காட்டும். அதில் நீங்கள் யாருக்கு வேண்டுமோ அவர்களின் பெயரை (ஒரு முறையில் ஒரு பெயர்) டைப் செய்து அனுப்பினால் நீங்கள் கண் இமைக்கும் நேரத்தில் உங்களது சான்றிதழ் உங்களுக்கு வந்து விடும். இன்னொருவருக்கு வேண்டுமென்றாலும் அப்படியே தொடர்ந்து பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.
அவ்வளவுதான் எளிய முறையில் உங்களது வாட்ஸப் மூலமாகவே உங்கள் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவல் உதவியாக இருந்தால் கண்டிப்பா கமெண்ட் பாக்சில் கமெண்ட் பண்ணுங்க..