இந்தியாவின் ஐடி நகரமாகப் பெங்களூர் அதிகப்படியான மழை காரணமாக மோசமாகப் பாதித்துள்ளது, குறிப்பாகப் பெரும் பணக்காரர்களை இந்த மழை வெள்ளம் பெரிய அளவில் பாதித்துள்ளதால் அனைத்து மட்டங்களிலும் பெங்களூர் நிலை குறித்து விவாதம் நடந்து வருகிறது.
பெங்களூரில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகள், பணக்காரர்களுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீட்டுப் பகுதிகள் என இந்நகரத்தின் எதிர்காலம் எனப் பெருமைக் கொள்ளப்படும் இடங்கள் அனைத்தும் இந்த மழை வெள்ளத்தில் பாதித்துள்ளது.
இதிலும் குறிப்பாக இந்த வீடியோ பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
ஐடி துறையில் நடப்பது கொடுமை.. முன்னாள் நாஸ்காம் கிரண் அதிரடி..!
பெங்களூர்
பெங்களூரில் உருவான மழை வெள்ளம் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பினாலும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. பெங்களூரின் முக்கியப் பகுதிகளான பெல்லந்தூர், ஒயிட்ஃபீல்டு, வெளிவட்ட சாலை, பிஇஎம்எல் லேஅவுட், சர்ஜாபுரா சாலை ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களாக உள்ளது.
வில்லா வீடுகள்
இதேபோல் பெரும் பணக்காரர்கள் நிறுவன தலைவர்கள் என முக்கியப் புள்ளிகள் வசிக்கும் ஆடம்பர வில்லா வீடுகள் இருக்கும் பகுதியான யமலூரில் இருக்கும் பலர் வீட்டு, கார்களை விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என டிராக்டர் மற்றும் படகிலும் பாதுகாப்பான இடத்திற்குத் திரும்பியுள்ளனர்.
ஹோட்டல்
அனைத்திற்கும் மேலமாக இந்த ஆடம்பர பகுதிகளில் இருப்பவர்கள் நிலைமை சரியாகும் வரையில் வீட்டுக்கு செல்ல முடியாது என்பதால் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனால் பெங்களூரில் இருக்கும் 3 ஸ்டார், 4 ஸ்டார், 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ளூர் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. இதேபோல் டிமாண்டுக்கு ஏற்றவாறு வாடகையைத் தாறுமாறாக ஹோட்டல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
வைரல் வீடியோ
இப்படிப் பெங்களூரில் முக்கியமான பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகளில் இடுப்பு வரை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் இப்பகுதியில் இருப்பவர்கள் வைத்திருக்கும் Lexus NX SUV and a Lexus sedan, Bentley Bentayga, Audi Q5 மற்றும் Land Rover போன்ற ஆடம்பர கார்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
கௌரவ் முன்ஜால்
இப்படிப்பட்ட ஒரு பகுதியில் தான் Unacademy நிறுவனத்தின் சிஇஓ கௌரவ் முன்ஜால் தனது டிவிட்டரில் குடும்பமும் எனது செல்லப்பிராணி ஆல்பஸும் இப்போது நீரில் மூழ்கியுள்ள எங்கள் வீட்டுப் பகுதியில் இருந்து டிராக்டரில் வெளியேற்றியுள்ளோம். நிலைமை மோசமாக உள்ளன என்று டிவீட் செய்துள்ளார்.
பெங்களூர் மழை வெள்ளம்
இப்படிப் பெங்களூர் மழை வெள்ளம் பணக்காரர்களையும், கோடீஸ்வரர்களையும் புரட்டிப்போட்டு உள்ளது. மழைக்குப் பணக்காரர்கள், ஏழைகள் என வித்தியாசம் தெரியாது தானே.. பெங்களூரில் வழக்கமான பருவ மழையைக் காட்டிலும் சுமார் 141 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.
These are houses worth more than 30Cr #bangalorerains pic.twitter.com/6D5z29AKLd
— Rakshith Shivaram/ರಕ್ಷಿತ್ ಶಿವರಾಂ (@Bkrs_Rakshith) September 6, 2022
Family and my Pet Albus has been evacuated on a Tractor from our society that’s now submerged. Things are bad. Please take care. DM me if you need any help, I’ll try my best to help. pic.twitter.com/MYnGgyvfx0
— Gaurav Munjal (@gauravmunjal) September 6, 2022
இண்டர்நெட்-ஐ கலக்கும் டிராக்டர் மீம்ஸ்.. ஐடி ஊழியர்கள் பாவம்..!
Bengaluru Rains: 30 crore house, Luxury cars Bentley, Lexus submerged in flood located in Posh areas
Bengaluru Rains: 30 crore house, Luxury cars Bentley, Lexus submerged in flood located in Posh areas of Bangalore