ரஜினி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கார்த்தி

அமரர் கல்கி எழுதி இலட்சக்கணக்கான வாசகர்களால் பலமுறை படித்து ரசிக்கப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை திரைப்படமாக எடுக்கும் முயற்சி எம்ஜிஆர் காலம்தொட்டு கடந்த ஐம்பது வருடங்களாக அவ்வப்போது நடைபெற்றது. எம்ஜிஆர் அதன்பிறகு கமல், இரண்டுமுறை மணிரத்னம் என பலரும் இந்த முயற்சியில் இறங்கினர்.. ஆனால் இப்போதுதான் பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகும் நேரம் கூடி வந்துள்ளது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட ரஜினி மற்றும் கமல் இருவரும் பேசியதிலிருந்து ஒரு புதிய தகவல் தெரியவந்தது. ரஜினி பேசும்போது ஒருமுறை ஜெயலலிதா தனது பேட்டியில் பொன்னியின் செல்வன் கதையில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கூறியதாக தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அதேபோல இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் கமல் இறங்கியபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அதுகுறித்த பகிர்ந்துகொண்ட சமயத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக் என்றும், ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நீ நடி என்றும் தன்னிடம் கூறியதாக கமல் ஒரு தகவலை தெரிவித்தார். அந்த வகையில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என இரண்டு முன்னணி ஜாம்பவான்கள் அப்போதே குறிப்பிட்டிருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது கார்த்தி நடித்துள்ளார்.

அதேசமயம் ரஜினி இந்தக் கதையில் வரும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பி மணிரத்னத்திடம் கேட்டுள்ளார் ஆனால் அவரது வேண்டுகோளை மறுத்துவிட்டார் மணிரத்னம்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.