சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நதிகளுக்கும் என்ன வேலை என குறிப்பிட்டு கோவை நகரின் பல்வேறு இடங்களில் தமிழக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் புகைபடங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நீதித்துறையினருக்கான விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி திறந்து வைத்தார். இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வுக்கு கோவை வந்த தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்கும் விதமாக கோவை நகரின் பல்வேறு இடங்களில் திமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.
அந்த போஸ்டர்களில் “சிங்கம் ஆடும் களத்தில் ஆடுகளுக்கும், நரிகளுக்கும் என்னடா வேல?” என குறிப்பிட்டு இருப்பதுடன் அதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி. டி .ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்று இருக்கின்றது. இந்த போஸ்டரானது தற்பொழுது மக்களை திரும்பி பார்க்க செய்துள்ளது. இது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.