முதற்கட்டமாக சோதனை முறையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் ட்விட்டரில் இருந்து வாட்ஸப்பிற்கு நேரடியாக ட்வீட்டுகளை பகிர்வதற்கான ஆப்ஷன் வழங்கி உள்ளது ட்விட்டர் நிறுவனம்.
ஒவ்வொரு ட்வீட்டுக்கு கீழும் கமெண்ட் பாக்ஸ் , ரீட்வீட் , லைக் மற்றும் ஷேர் ஆப்ஷன்கள் இருக்கும். அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பின் ஐக்கானை ட்விட்டர் நிறுவனம் சேர்த்துள்ளது. இது ஒரு சோதனை முயற்சி என்பதையும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறிப்பிட்ட லிமிட்டட் பயனர்களுக்கு மட்டுமே இந்த வாட்ஸப் ஐகான் அவர்களது ட்வீட்டுக்கு கீழே காட்டும். அதன் வழியாக நேரடியாக அந்த வாட்ஸப் ஐக்கானை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ட்விட்டரில் இருந்து பகிர நினைப்பதை வாட்ஸப்பிற்கு பகிர்ந்து கொள்ளலாம்.
ஏற்கனவே ட்விட்டர் மூலம் குறிப்பிட்ட அளவில் கான்டாக்ட் பகிர்வு முறையை அமல்படுத்துவதற்கான ஆப்ஷனை அறிமுகப்படுத்துவதற்கான சோதனையில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்த புதிய முயற்சி பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கு முன் உங்கள் ட்விட்டரிலிருந்து ஏதாவது பகிர வேண்டுமென்றால் ட்வீட்டுக்கு கீழே உள்ள ஷேர் ஆப்சனை அழுத்தி பின் திரையில் தோன்றும் வாட்சப் மற்றும் முகநூல் உட்பட இதர செயலிகளுக்கு நீங்கள் அனுப்ப நினைப்பதை அனுப்பிக் கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் இந்த புதிய ஆப்ஷன் நேர விரயத்தை குறைத்து ஷேரிங்கை சுலபமாக்கும்.
இப்போதைக்கு இது சோதனை நிகழ்வாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை பயன்படுத்துபவர்கள் இது குறித்து கருத்துக்களை பகிருமாறு ட்விட்டர் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் அதை முழுமையாக அமல்படுத்துவதற்கான வேலையில் ட்விட்டர் இறங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
உங்களுக்கு இந்த வாட்ஸப் ஐக்கான் உங்கள் ட்விட்டரில் தெரிந்தால் அது குறித்தான அனுபவத்தை ட்விட்டரோடும் எங்களோடும் கருத்துப்பட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஷேரிங் இஸ் கேரிங் இல்லைங்களா…