உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்கள்.. ஏர் இந்தியா அதிரடி திட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டி இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கத்தாருக்கு கூடுதல் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்களை கத்தாருக்கு இயக்கப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறப்பு விமானங்கள் சென்னையில் இருந்தும் இயக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறித்த தகவலையும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

FIFA உலக கோப்பை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்த புதிய விசா..!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டி

2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் இந்த ஆண்டு நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு கத்தாருக்கான பயணத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் சிறப்பு விமானங்களை கத்தாருக்கு இயக்க திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

கத்தாரின் தலைநகர் தோஹாவிற்கு மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி முதல் கூடுதலாக 20 விமானங்களைத் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில் இருந்து தோஹாவிற்கு வாரத்திற்கு 13 விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து வாரத்திற்கு 4 விமானங்களும், சென்னையில் இருந்து வாரத்திற்கு 3 விமானங்களும் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

சென்னை-தோஹா
 

சென்னை-தோஹா

சென்னை-தோஹா விமான சேவை நவம்பர் 10 முதல் தொடங்கும் என்றும், அதேபோல் ஹைதராபாத்-தோஹா நவம்பர் 11 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பையில் இருந்து தோஹாவிற்கு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 30 முதல் விமானங்கள் இயக்கப்படும். ஏற்கனவே புதுதில்லியில் இருந்து தோஹாவிற்கு தற்போதுள்ள தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கால்பந்து போட்டிகள் நடைபெறும் தேதிகளில் கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

புதிய விமானங்கள்

புதிய விமானங்கள்

கத்தாருக்கு சிறப்பு விமானங்கள் இயக்க கூடுதலாக விமானங்கள் வாடகைக்கு பெறப்படும் என்றும், மேலும் தேவை ஏற்பட்டால் புதிய விமானங்கள் வாங்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. கடந்த மாதம், ஏர் இந்தியா தனது உள்நாட்டு நெட்வொர்க்கில் 14 புதிய விமானங்களை அறிமுகப்படுத்தியது என்பது தெரிந்ததே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India aims to tap FIFA World Cup fever, launches more flights to Qatar

Air India aims to tap FIFA World Cup fever, launches more flights to Qatar | உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக சிறப்பு விமானங்கள்.. ஏர் இந்தியா அதிரடி திட்டம்

Story first published: Thursday, September 8, 2022, 22:10 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.