ஓ.பி.எஸ் அணியில் இன்னும் இணையவில்லை: பாக்யராஜ் திடீர் பேட்டி

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே உள்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜ், “ஒ.பி.எஸ் தலைமையில் அதிமுகவில் இணைவதாக இரு வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அப்போது கே. பாக்யராஜ், அதிமுகவை காப்பாற்றவும் எம்ஜிஆரின் பெயரை காப்பாற்றவும் சிறிய தொண்டனாக என்னால் ஆன முயற்சியை செய்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவில் அனைவரும் இணைந்து முறையாக செயல்படுவோம்” என்றார். இந்த நிலையில் கே. பாக்யராஜ் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் நெறியாளர் அதிமுகவின் ஒபிஎஸ் அணியில் இணைந்தது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த பாக்யராஜ், “தாம் கட்சியில் இன்னமும் உறுப்பினர் கிடையாது” எனப் பதிலளித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அந்தக் கட்சி நல்லா இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் இன்னமும் உறுப்பினர் கூட கிடையாது. மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன்.

முதலில் அழைப்பு வந்ததும் மைலாப்பூரில் அவரை சந்திக்க சென்றேன். அவரிடம் பேசும்போது, கட்சியில் இணைய அவர் அழைப்பு விடுத்தார். அப்போது என்னுடைய பங்கு என்னவோ, கடைசி தொண்டனாக அதைச் செய்வேன். கட்சியை வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நானும் கட்சியில் இணைந்து செயல்படுவேன்” என்றும் கூறினேன்.

அதற்குள் வெளியில் செய்தியாளர்கள் கூடிவிட்டனர். அப்போது உள்ளே பேசிய, எல்லோரும் நல்லா இருக்கணும். கட்சியின் ஒற்றுமைக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று இருவரிடமு பேச நினைத்தேன். அதை அப்படியே கூறினேன்” என்றார்.
பாக்யராஜின் இந்தப் பேச்சு நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.