ராணியாரின் இறுதிச்சடங்குகள் தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்களில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்குகள் தொடர்பில் இதுவரை உத்தியோகப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.
ஆனால், அவர் இறந்த 10 நாட்களுக்கு பின்னர் இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
@ap
96 வயதான இரண்டாம் எலிசபெத் ராணியார் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வியாழக்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராணியாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் உறுதியான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் இதுவரை சார்லஸ் மன்னரை தொடர்பு கொள்ளவில்லை எனவும், அவருடன் தொலைபேசியில் இதுவரை அழைத்துப் பேசவில்லை எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ராணியாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க இருப்பதாக ஜோ பைடன் வெளிப்படையாக கூறியுள்ளது போன்று இதுவரை எந்த உலகத் தலைவர்களும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சார்லஸ் மன்னருக்கு இரங்கல் செய்தி மட்டும் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷ்யர்கள் மனதில் ஒருபோதும் ராணியார் இரண்டாம் எலிசபெத் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov தெரிவித்துள்ள நிலையில், விளாடிமிர் புடின் ராணியாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, தமக்கு வாய்ப்பு அமையும் என்றால் ராணியாரின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தாம் விரும்புவதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
உறுதியாக பங்கேற்பார் என நம்பப்படும் தலைவர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் என்றே தெரிய வந்துள்ளது.
ராணியாரின் மறைவு செய்தி மிகுந்த சோகத்தையும் வெறுமையையும் ஏற்படுத்தியுள்ளதாக மேக்ரான் தெரிவித்துள்ளார்.