காந்திநகர்: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம்கோர்ட், 2 வாரத்துக்குள் குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்ற வெறும் 5 மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
இதில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர்.. 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறியிருந்தது.
கர்ப்பிணி
இதுதொடர்பாக கலவரமும், மதக்கலவரமும் ஏற்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.. இந்த கலவரத்தின்போது 2022 பிப்ரவரி 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார். பில்கிஸ் பானுவுக்கு அப்போது 21 வயதுதான்.. 5 மாதம் கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தது…
இஸ்லாமிய மதம்
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டபோது, அதாவது, 2002 மார்ச் 3-ம் தேதி, ஷபர்வாட் என்ற கிராமத்தில் 20-30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டனர்.. இதில், பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக்கொன்றது அந்த கும்பல்.. மேலும், கர்ப்பிணி பில்கிஸ், அவரது அம்மா, உட்பட 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.. பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
11 பேர் குற்றவாளிகள்
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை சமீபத்தில் குஜராத் அரசு சமீபத்தில் விடுதலை செய்தது. குற்றவாளிகளின் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் தெரிவித்ததையடுத்து, 11 பேரை அம்மாநில அரசு விடுவித்தது… இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
2 வாரம் டைம்
இந்த மனு மீதான கடந்த விசாரணையில், மத்திய அரசும், குஜராத் அரசும் பதிலளிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 வார காலத்திற்குள் குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, முக்கிய கவனத்தை பெற்று வருகிறது.