பிரிட்டன் ராணி எலிசபெத் பிரிட்டனின் அரச பதவியில் நீண்டகாலம் அலங்கரித்தவர். தனது 70 ஆண்டுகால ஆட்சியில் எலிசபெத் அரசக் குடும்பத்தின் விதிகளை மீறாது கடைசி வரையில் பின்பற்றினார். குறிப்பாக தான் அணியும் உடை முதல் நகை, கடிகாரம் என அனைத்தும் பிரிட்டன் குடும்பத்தின் பண்பை போற்றியவர்.
பல விமர்சனங்களையும் கடந்து பிரிட்டனின் ராணியாக தனது பொறுப்பை முழுமையாக செய்து ,கம்பீரமான ராணியாக எலிசபெத் விடைபெற்று இருக்கிறார்.
ராணி எலிசபெத்-க்கு கிடைத்த ‘அந்த’ சலுகை புதிய மன்னர் சார்லஸ்-க்கும் கிடைக்குமா..?
கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம்
இவரின் கம்பீரமான ஆட்சிக்கும், எலிசபெத்தின் கம்பீரத்தினையும் மேலும் அதிகரித்தது அவரின் வைர கிரீடம் தான். இன்றும் உலகின் பலவிதமான வைரங்கள் இருந்தாலும், உலகின் மிகவும் மதிப்புமிக்க வைரம் கோஹினூர் வைரம் தான். இது இந்தியாவுக்கு சொந்தமானது. பிரிட்டீஷ் படையெடுப்பின் போது இந்தியாவில் இருந்து திருடப்பட்டதாகவும் கருத்துகள் உண்டு.
இத்தனை வைரங்களா?
எது எப்படியோ ராணி எலிசபெத்தின் அழகினை மேலும் அலகரித்து வந்த கோஹினூர் வைரமானது, தற்போது அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணி எலிசபெத் மறைந்துள்ள நிலையில் அந்த கிரீடம் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கிரீடத்தில் 2900 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட, ஒரு பெரும் வரலாற்றினை கொண்ட மணி மகுடமாக உள்ளது.
இனி யாருக்கு?
பிரிட்டனின் ரானி இரண்டாம் எலிசபெத் மறைந்துள்ள நிலையில், தற்போது அவரது மூத்த மகன் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். ஆக அவரது மனைவி கமீலா பிரிட்டனின் புதிய ராணியாகிரார். இதன் மூலம் கமிலாவுக்கே இந்த கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எங்கே?
கோஹினூர் வைரமானது 1937ம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு பிறகு, ராணி எலிசபெத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த விலையுயர்ந்த கிரீடத்தில் பற்பல விலையுயர்ந்த கற்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்போது லண்டன் கோபுரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மதிப்பு மிக்க வைரம்?
உலகின் மிகப்பெரிய மதிப்பு மிக்க வைரங்களில் கோஹினூர் வைரம் ஒன்றாகும். இது 105.6 கேரட் எடை கொண்டது. இது பிரிட்டன் அரசியின் கிரீடத்தில் இருந்து வருகின்றது. கடந்த 1953ம் ஆண்டு முதல் ராணி இரண்டாம் எலிசபெத் மணி மகுடத்தில் கோஹினூர் வைரம் உள்ளது.
வரலாறு பேசும் கிரீடம்
இந்த வைரத்தின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இந்த வைரம் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள கொல்லூர் என்ற இடத்தில், கிபி 13ம் நூற்றாண்டில் இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக இந்த விலை உயர்ந்த வைரமானது பஞ்சாப்பை ஆண்ட துலீப் சிங் என்ற மன்னரால் பிரிட்டீஷாரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து பல வரலாற்று கதைகள் இருந்து வருகின்றன.
இதன் மதிப்பு எவ்வளவு?
இதன் இன்றைய மதிப்பு 3 – 5 பில்லியன் பவுண்டுகள், இந்திய மதிப்பு 4500 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதில் வைரம், பிளாக் பிரின்ஸின் ரூபி, 11 மரகத கற்கள், 269 முத்துகள் என பலவும் அடங்கிய இந்த கிரீடமானது, 2900 விலையுயர்ந்த கற்களை கொண்டுள்ளது. இது மிக நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
How much is Queen Elizabeth II’s costly crown worth?
How much is Queen Elizabeth II’s costly crown worth?