காரைக்கால்: காரைக்கால் நேரு நகரை சேர்ந்த பாலமணிகண்டன்(13). தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். அதே வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் விக்டோரியா சகாயராணி, கடந்த 3ம் தேதி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் பாலமணிகண்டன் இறந்தார். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால்தான் பாலமணிகண்டன் இறந்து விட்டதாக அவனது பெற்றோர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோரை புதுச்சேரி அரசு சஸ்பெண்ட் செய்தது.