பாடலாசிரியர் கபிலன் மகள் தூக்கிட்டு தற்கொலை! நடந்தது என்ன?

பிரபல திரைப்பட பாடலாசிரியரான கபிலன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள திருப்பூர் குமரன் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் தூரிகை (28) MBA படிப்பு முடித்துவிட்டு ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் பணியாற்றி வந்தார். மேலும், பியூட்டீஷியன், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட துறைகளில் இருந்த ஆர்வம் மிகுதியால் பேஷன் ஷொக்களிலும் இவர் பங்கு பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண்களுக்கான மேகசின் ஒன்றையும் இவர் தொடங்கி நடத்தி வந்தார். 

இந்நிலையில் தூரிகை இன்று மாலை அவரது வீட்டின் 3 ஆம் தளத்தில் உள்ள மின்விசிறியில் தனக்குத் தானே தூக்கிட்டுக்கொண்டார். மகளை வெகுநேரமாகியும் காணவில்லை என தேடி வந்த தாயார் அவர் தூக்கில் தொங்கியபடி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். எனினும் சிகிச்சை பலனின்றி தூரிகை சுமார் 7.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற அரும்பாக்கம் போலீசார் பாடலாசிரியர் கபிலன் மகள் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தூரிகை தான் விரும்பிய ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அவரது வீட்டில் வேறு நபருடன் திருமணம் செய்துகொள்ள தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kapilan

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.