Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அபார வெற்றி
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்த 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதிய மன்னர் சார்லஸ்
செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறவுள்ளார். அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இன்று மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
பொறியியல் படிப்பு: பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப்.10)தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து 2020ஆம் ஆண்டு கோவையில் பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு
சென்னை, நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 5,554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் 48,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண்- வைரமுத்து அஞ்சலி
எழுபது ஆண்டுகள்அரசாண்ட முதல் அரசி17 பிரதமர்கள் கண்டமுதல் மகாராணிராஜ குடும்பத்தின்முதல் பொறி நெறியாளர்ராணுவப் பணி செய்தமுதல் அரண்மனைப் பெண்அரசி எனில் தானே எனஉலகை உணரவைத்தமுதல் ராணிஉங்களோடு கை குலுக்கியதுஎன் உள்ளங்கைப் பெருமைஉங்கள் புகழைக்காலம் சுமந்து செல்லும் pic.twitter.com/thHHB30MmW
— வைரமுத்து (@Vairamuthu) September 10, 2022
தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், புதிய மின்கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், புதிய மின்கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில், சேருவதற்கு https://adm.tanuvas.ac.in இணையதளம் வாயிலாக வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் நடைபெறுகிறது.
ராகுல் காந்தி, கன்னியாகுமரி, முளகுமூடு பகுதியிலிருந்து 4வது நாள் நடை பயணத்தை தொடங்கினார்.