கொலையான மாணவர் குடும்பத்திற்கு அரசு வீடு| Dinamalar

புதுச்சேரி: காரைக்காலில், சக மாணவியின் தாயால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் இலவச வீடு வழங்கப்பட்டது.

காரைக்காலை சேர்ந்த மாணவர் பாலமணிகண்டன், 13. இவர் மீதான பொறாமை காரணமாக, சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, 45, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துமாணவரை கொலை செய்தார். மாணவரை இழந்து, வாடகை வீட்டில் வசிக்கும் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அரசு சார்பில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று மாலை, காரைக்காலில் குடிசை மாற்று வாரிய வீட்டை, மாணவர் பாலமணிகண்டன் தந்தை ராஜேந்திரனிடம் ஒப்படைத்தார். துணை கலெக்டர் ஆதர்ஷ், தாசில்தார் மதன்குமார் மற்றும் மாணவரின் உறவினர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.