குஜராத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஊழல், விலைவாசி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில், தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து முதலமைச்சராக பதவி வகித்து வந்த மோடி, 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.
குஜராத்
இந்தத் தேர்தலில் 336 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். 2 முறை பிரதமராக பதவியேற்ற போதிலும், தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார் பிரதமர் மோடி. குஜராத் மாநிலத்தில், கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம்
ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி எவ்வளவோ முயன்றும் பிரதமர் மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரத்தால் பாஜக ஆட்டசியை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில், குஜராத்தில் 27 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
முழு அடைப்பு போராட்டம்
குஜராத் மாநிலத்தில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருவதாகவும், லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்தும் நிரப்பப்படவில்லை என்றும் காங்கிர கட்சி குற்றம்சாட்டியுள்ளது. குஜராத் மாநிலத்தில் வேலையில்லா திட்டம் தலைவிரித்தாடுவாகவும், மாநிலத்தில் ஊழல் பெருகிவிட்டதாகவும் குற்றம்சாட்டி, ஆளும் பாஜக ஆட்சியைக் கண்டித்து, இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
தீவிர கண்காணிப்பு
அதன்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய முழு அடைப்பு போராட்டம் 12 மணி வரை நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள் உள்ளிட்டோர், தங்களது வாகனங்களை இயக்கமால் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.