“காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் எனவும், தகுதி உள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் ” என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி மறுத்து விட்ட நிலையில், அவரை எப்படியாவது போட்டியிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் வைராக்கியமாக இருக்கின்றனர்.
ராகுல் காந்தி போட்டியிடாத பட்சத்தில், ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை களமிறக்க, சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் எம்பி சசி தரூர் இந்தத் தேர்தலில போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், “காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் எனவும், தகுதி உள்ள வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க வேண்டும் ” என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசி தரூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இது தொடர்பாக, சசி தரூர், மணிஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரத்யுத் பர்தோலி, அப்துல் காலிக் ஆகியோர் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
காங்கிரஸ் தலைவர் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்படுவது அவசியம். அது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது. ஆகவே, தேர்தலில் யாரெல்லாம் ஓட்டுப் போடலாம், தகுதி வாய்ந்தவர்கள் யார் என்பது குறித்த வாக்காளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட வேண்டும். இந்த பட்டியலை வெளிப்படையாக அறிவித்தால் தான் வேட்பாளர்களுக்கும் தேர்ந்தெடுப்போருக்கும் தெளிவான முடிவு எடுக்க முடியும்.
வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ கமிட்டிகளுக்கம், 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்ற வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மையும், நியாயமாக நடப்பதையும் நினைத்து கவலைப்படுகிறோம். கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.
கட்சியின் எந்தவொரு, உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என நாங்கள் ஆலோசனை தரவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.