சென்னை பெரம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே இரவு நேரத்தில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது 12 மணி அளவில் அவ்வழியே ஒரு ஆட்டோ சென்றுள்ளது.
அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அது ஒரு வழி பாதை என்ற காரணத்தால் நோ என்ட்ரீயில் ஆட்டோ செல்வதாக கூறி அவர்களிடம் அபராதம் செலுத்துமாறு தெரிவித்துள்ளார். அப்பொழுது ஆட்டோ ஓட்டுனர் கர்ப்பிணிப் பின் ஆட்டோவில் இருக்கிறார் என்றும், அவரது குழந்தை மற்றும் அந்த கர்ப்பிணி பெண்ணை சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, போலீசார் அபராதம் கட்ட வற்புறுத்திய நிலையில் இரவு நேரம் வாகனங்கள் எதுவும் வராது என்ற காரணத்தாலும், கர்ப்பிணி பெண் இருக்கிறார் என்ற அவசரத்தில் தான் வந்துவிட்டேன் மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். ஆனால் இதை சற்றும் பொருட்படுத்தாத உதவி ஆய்வாளர் பாலமுரளி அபராதம் கேட்டு மிரட்டியுள்ளார்.
அவர் கோபமாக பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி மது போதையில் இருந்ததாக வீடியோவை பதிவிட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.