எல்லாம் அவன் துணை.. மும்பை லால்பகுசா கோவிலில் முகேஷ் அம்பானி, அனந்த் அம்பானி வழிபாடு..!

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலகமாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மும்பையில் உள்ள பிரபலமான புகழ்பெற்ற லால்பகுசா ராஜா மண்டல் விநாயகர் கோவிலில், வெகு சிறப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடாப்பட்டு வருவது வழக்கமான ஒன்று.

மிக பழமை வாய்ந்த 88 வருடம் பாரம்பரியம் மிக்க இந்த கோவிலில் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடி, 11 வது நாளில் விநாயகர் சிலையை கடலில் கரைப்பது வழக்கமான ஒன்று.

அமெரிக்க நிறுவனத்தை அலேக்கா தூக்கும் முகேஷ் அம்பானி.. கடைக்குட்டி-க்கு ஜாக்பாட்..!

பல லட்சம் பேர் வழிபாடு

பல லட்சம் பேர் வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் இந்த விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா காலத்தில் மட்டும் பல லட்சம் மக்கள், தொழிலதிபர்கள், பல முக்கிய பிரமுகர்கள் என வந்து வழிபடுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும், அவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியும் கோவிலுக்கு வந்து நேற்று வழிபட்டுள்ளனர்.

 முகேஷ் அம்பானி மகனுடன் வழிபாடு

முகேஷ் அம்பானி மகனுடன் வழிபாடு

கோவிலில் வழிபட்ட முகேஷ் அம்பானி மற்றும் அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியும், விநாயகர் சிலைக்கு பண மாலை, பூமாலை அணிவித்து சிறிது நேரம் மனமுருகி வழிபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக விழாக்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இன்னும் விமரிசையாக விழாவானது, நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஆனந்த சதுர்தசி நாளில் வழிபாடு
 

ஆனந்த சதுர்தசி நாளில் வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பேர் வரையில் இந்த கோவிலை வழிபடுவார்கள். குறிப்பாக ஆனந்த சதுர்தசி நாளையொட்டி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வழிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுவும் அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியுடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த சதுர் தசியின் சிறப்பு ?

ஆனந்த சதுர் தசியின் சிறப்பு ?

ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தசி திதியில் ஆனந்த் சதுர்தசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆனந்த சதுர்தசி செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்பட்டது. ஆனந்த சதுர்தசி நாளில், மகாவிஷ்ணுவை பூஜித்து நன்மைகளைப் பெறலாம். 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் உற்சவமும் நேற்றுடனே முடிவுக்கு வந்தது. ஆனந்த் சதுர்தசி விரதத்தை 14 ஆண்டுகள் தொடர்ந்து கடைபிடிப்பது முக்தியைக் கொடுக்கும் என்பது இந்து மத நம்பிக்கை ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance industries chairman Mukesh Ambani prayers at Mumbai’s Lalbaugcha Raja

Reliance industries chairman Mukesh Ambani prayers at Mumbai’s Lalbaugcha Raja

Story first published: Saturday, September 10, 2022, 12:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.