மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் லல்லு சிங் தாக்கூர். இவர் கோல்கவானில் ஒரு மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்துவந்தார். எப்போதும் மாலை வீடு திரும்பும் போது உடலில் ஒட்டியிருக்கும் மாவுதூசியை கம்ப்ரஸர் இயந்திருஅம் மூலம் சுத்தம் செய்துவிட்டு புறப்படுவார்.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி வேலை முடித்துவிட்டு எப்போதும் போல உடலை சுத்தப்படுத்தியிருக்கிறார். அப்போது முதுகில் இருக்கும் தூசிகளை சுத்தப்படுத்த தன்னுடன் வேலை செய்யும் கப்பர் கோல் என்ற 24 வயது இளைஞரை அழைத்திருக்கிறார். இளைஞரும் முதுகில் சுத்தம் செய்யும் போது விளையாட்டாக ஆசனவாய் பகுதிக்கு கம்ப்ரஸரை கொண்டுபோயிருக்கிறார்.
அப்போது, கம்பரஸர் மலக்குடலுக்குள் அதிகபடியாக காற்றை செலுத்தியதில் சரிந்து விழுந்த லல்லு சிங் தாக்கூரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு சிகிச்சை பலனின்றி லல்லு சிங் தாக்கூர் சமீபத்தில் இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பக காவல்துறை வழக்கு பதிவு செய்து கப்பர் கோலை நேற்று கைது செய்திருக்கிறது.
மேலும், இது தொடர்பாக, “மலக்குடலில் காற்று நிரம்பியதால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சையின் போது இறந்தார். இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் கப்பர் கோல் விளையாட்டாக செய்த காரியம் வினையில் முடிந்திருகிறது என்பது தெரிய வந்திருக்கிறது.