இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.. எவ்வளவு அதிகம்? முழு விவரங்கள்!

தமிழகத்தில் மின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்துவது குறித்து சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் தற்போது மின் கட்டண உயர்வுக்கு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து இன்று முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உபர் கூடுதல் கட்டணம் வசூலித்ததா? எப்படி அதனைத் திரும்பப் பெறுவது தெரியுமா?

8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு

8 ஆண்டுகளுக்கு பின் உயர்வு

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு கடந்த 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் 2026 – 27 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என்றும், 100 யூனிட் மின்சாரம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் மின்சார வாரியத்திற்கு எழுதிக் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கட்டண உயர்வின் முழு விவரங்கள்

கட்டண உயர்வின் முழு விவரங்கள்

இந்த நிலையில் புதிய மின் கட்டணத்தை எவ்வளவு யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால் எவ்வளவு மின் கட்டணம் அதிகம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

200 யூனிட்
 

200 யூனிட்

100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் மின் கட்டணம் இல்லை. 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 ரூபாய் என 2 மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

300 யூனிட் முதல் 500 யூனிட் வரை

300 யூனிட் முதல் 500 யூனிட் வரை

300 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு ரூ.145 அதிக கட்டணமும், 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 295 ரூபாய் அதிக கட்டணமும் நுகர்வோர் கட்ட வேண்டும். அதேபோல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு 595 ரூபாய் அதிக கட்டணம் கட்ட வேண்டும்.

600 யூனிட் முதல் 900 யூனிட் வரை

600 யூனிட் முதல் 900 யூனிட் வரை

600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 310 ரூபாயும், 700 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2மாதங்களுக்கு கூடுதலாக 550 ரூபாயும் 800 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 790 ரூபாயும் 900 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால் 2 மாதங்களுக்கு கூடுதலாக 1130 ரூபாயும் கட்ட வேண்டும்.

மின்வாரிய இணையதளம்

மின்வாரிய இணையதளம்

மேலும் மின் கட்டண உயர்வு குறித்த அனைத்து தகவல்களும் மின்சார வாரிய இணையதளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக்த்தில் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ள அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamil Nadu government hikes power tariff for TANGEDCO

Tamil Nadu government hikes power tariff for TANGEDCO | இன்று முதல் மின்கட்டண உயர்வு அமல்.. எவ்வளவு அதிகம்? முழு விவரங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.