இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 மே மாதம் நடக்கவுள்ளது. மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா கூட்டணி அமைக்கப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்திருந்தார். பாஜகவை எதிர்த்து வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் பாஜக அடுத்த பக்கம் இருக்க வேண்டும் என்றும் வியூகங்களை எதிர்கட்சிகள் வகுத்து வருகின்றன. இந்நிலையில், 2024 தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்து விட்டால் என்னை சுட்டுக்கொல்லவும் வாய்ப்புள்ளதாக
பேசியது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2024 க்கு பிறகு இந்திய அரசியல் சூழல் வெகுவாக மாறப்போகிறது. மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் ஒரு நள்ளிரவு மேடையில் மோடியோ அல்லது மோடியால் உருவாக்கப்படுகிற ஒரு கேடியோ தொலைக்காட்சியில் பேசுவார்கள் அப்போது, இதுவரை நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு சட்டம் இனி செல்லாது. மனுதர்மமே இனி அரசமைப்பு சட்டமாக இருக்கும் என சொல்வார்கள் அப்போது நாம் எதுவுமே செய்ய முடியாது. மிசா காலத்தில் எல்லோரும் எப்படி பந்தாடப்பட்டார்களோ அப்படியே நடக்கும். திருமாவளவன் ஒருவேளை சுட்டு கொல்லப்பட்டும்இருக்கலாம்.
இப்படித்தான் 2024 க்கு பிறகு நடக்கும்… 2024 க்கு பிறகு முற்போக்கு சிந்தனை கூடாது… ஜனநாயக சிந்தனை கூடாது… இளம் தலைமுறையினரிடையே ஜனநாயக அரசியலை பரப்பக்கூடாது… உத்தரப் பிரதேசத்தில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக 700 பக்கங்களை கொண்ட புதிய சட்ட புத்தகம் தயாராகி விட்டது. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்போது இந்தியா என்ற பெயர் இந்து ராஷ்டிரா என மாறிவிடும். டெல்லி தலைநகரமாக இருக்காது வாரணாசிதான் தலைநகரமாகும்.
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு வாழலாம், தொழில் செய்யலாம் ஆனால் வாக்கு செலுத்த முடியாது. எனவே மனுஷமிருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்க காத்திருக்கிறார்கள். அதற்காக குறிக்கப்பட்ட தேதி மே 2024 என இவ்வாறு திருமாவாவன் பேசியிருப்பது விசிக தொண்டர்களை கலக்கம் அடைய செய்துள்ளது.