உலகம் முழுவதும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு டெக் ஜாம்பவான்கள் கூட, தங்களது செலவினங்களை குறைக்க தொடங்கியுள்ளனர்.
பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை குறைத்துள்ளன. சம்பள அதிகரிப்பினை நிறுத்தி வைத்துள்ளன. மொத்தத்தில் ரெசசன் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அமெரிக்க நிறுவனங்களும் செலவு குறைப்பில் இறங்கியுள்ள நிலையில், அது இந்திய ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
மேற்கோண்டு அமெரிக்காவினை சேர்ந்த கடன் வழங்குனர்கள், பற்பல நிதி நிறுவனங்கள் என பலவும் செலவு குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறும் சர்வதேச மந்த நிலை.. எப்படி தெரியுமா?
முக்கிய வாடிக்கையாளர் BFSI
இது அமெரிக்காவில் ரெசசன் வரலாமோ என்ற அச்சத்தின் மத்தியில், நிதி நிறுவனங்கள் இத்தகைய நடவடிக்கையினை எடுக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்திய ஐடி துறையில் வங்கி, நிதித்துறை மற்றும் இன்சூரன்ஸ் (BFSI) துறை சார்ந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 30% ஆகும். இதன் மதிப்பு 2022ம் நிதியாண்டில் இதன் மதிப்பு 227 பில்லியன் டாலர் ஆகும்.
ஐடி துறையில் தாக்கம் இருக்கலாம்?
ஆக அமெரிக்கா நிதித்துறையில் ஏற்படும் மாற்றமானது, இந்திய ஐடி துறையில் உடனடியாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் பெரும் வங்கிகள் கிட்டதட்ட 40% (மொத்த செலவில்) ஐடி செலவின பங்கினை கொண்டுள்ளன. தற்போது நாட்டில் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் நிலையில், நிதித்துறை அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் செலவினை குறைக்க முற்படலாம். இது இந்திய ஐடி துறை வரையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அடுத்த ஆண்டிலும் தாக்கம் இருக்கலாம்
வரவிருக்கும் ஆண்டிலும் அமெரிக்காவில் செலவு குறைப்பு நடவடிக்கை என்பது இருக்க கூடும். கூடுதல் செலவினங்கள் குறைக்ககூடும். குறிப்பாக தொழில் நுட்ப செலவினங்களில் குறைப்பு இருக்கலாம். இது இந்திய ஐடி துறையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 – 24லிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வரவிருக்கும் ஆண்டிலும் அமெரிக்காவில் செலவு குறைப்பு நடவடிக்கை என்பது இருக்க கூடும். கூடுதல் செலவினங்கள் குறைக்ககூடும். குறிப்பாக தொழில் நுட்ப செலவினங்களில் குறைப்பு இருக்கலாம். இது இந்திய ஐடி துறையில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023 – 24லிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய ஐடி நிறுவனங்கள் டிஜிட்டல் மாற்றங்கள், முக்கிய வங்கி சேவை தயாரிப்புகள், வாடிக்கையாளார்களின் அனுபவங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல சேவைகளை வங்கிகளுக்கு வழங்கி வருகின்றன. இதோடு கடன் மற்றும் அடமான சேவைக்கு தேவையான சாப்ட்வேரினையும் வழங்கி வருகின்றன.
ஐடி துறையில் தாக்கம்
இதனால் இந்திய ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபோசிஸ், எம்பசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்காவின் தாக்கத்தினால் பெரும் தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ஐடி நிறுவனங்களின் செலவினையும் குறைக்க யோசிக்க வழிவகுக்கலாம். இதனால் பணியமர்த்தல் தொடங்கி, பங்குகளில் தாக்கம், சமபள அதிகரிப்பு வரையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
A slowdown in the US may impact Indian IT companies
A slowdown in the US may impact Indian IT companies