பிரபல இயக்குநரை விமர்சித்த ஸ்லீப்பிங் ஸ்டார் அஷ்வின் – மீண்டும் வெடித்தது சர்ச்சை

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் அஷ்வின். அவருக்கென்றும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்தவகையில் அவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு பேசிய அஷ்வின், “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால் யாராவது கதை கூறும்போது அது நன்றாக இல்லையென்றால் தூங்கிவிடுவேன். அப்படி இதுவரை 40 இயக்குநர்களிடம் கதை கேட்கும்போது  தூங்கிவிட்டேன்” என்றார்.

அஷ்வினின் இந்த ஆணவ பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். குறிப்பாக நெட்டிசன்கள் அஷ்வினை வைத்து செய்தனர். அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சூட்டினர். இதனால் அரண்டு போன அஷ்வின் தான் அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தச் சூழலில் ஈரம், வல்லினம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

 

அந்த வெப் சீரிஸில் ஒருவர், “சார் இவன் பேரு அஷ்வின் குமார். அவனே அவனை ஏகேனு சொல்லிக்குவான். ஃபோட்டோல பார்த்தா தூங்குன மாதிரிதான் இருப்பான். ஆனா நேர்ல நல்லா இருப்பான்” என வசனம் பேசும்படி காட்சி அமைந்திருந்தது. இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்ஸ், அஷ்வின் சரமாரியாக தாக்கப்பட்டார் என மீண்டும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அஷ்வின் தனது மௌனத்தை கலைத்திருக்கிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “தாங்கள் பிரைன் பியூட்டி இல்லை (அறிவழகன்) பிரைன் லெஸ் பியூட்டி (அறிவில்லாதவர்) என நிரூபித்திருக்கிறீர்கள். விமர்சனங்களை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். புரிஞ்சவன் பிஸ்தா” என பதிவிட்டுள்ளார்.

Arivu

அஷ்வினின் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை மீண்டும் ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். மேலும், அறிவு இல்லாதவர் இயக்கிய ஈரம், வல்லினம் ஆகிய படங்கள்தான் தேசிய விருது பெற்றதா எனவும் கேள்வி எழுப்பி தன்னை கிண்டல் அடித்ததையே ஏற்றுக்கொள்ள முடியாத அஷ்வினா கோலிவுட்டில் கோலோச்சப்போகிறார் எனவும் விமர்சனத்தை வைத்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.