பிரித்தானிய மகாராணி மற்றும் அவர் கணவர் பிலிப்பின் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்.
பிலிப் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் முறைபடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடலும், அவரது கணவர் பிலிப்பின் உடலும் அருகருகே நல்லடக்கம் செய்யப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராணி எலிசபெத் தனது 96வது வயதில் நேற்று முன் தினம் காலமானார்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் உயிரிழந்தார்.
தற்போது இந்த தம்பதியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ராணி எலிசபெத் மரணத்துக்குப் பிறகு, ராணி – பிலிப் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பம். அதனை அவர் முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து இளவரசர் பிலிப்ன் உடல் தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் வைக்கப்பட்டது. அதுநாள் முதல் இதுவரை அவர் தனது மனைவி ராணி இரண்டாம் எலிசபெத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
AP
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராணி இரண்டாம் எலிசபெத் வியாழன் அன்று உயிரிழந்தார்.
ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் இருந்து, மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது.
இங்குதான் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெற்றோரான ஆறாம் ஜார்ஜ், ராணி எலிசபெத்தின் உடல்களும், இரண்டாம் ராணி எலிசபெத்தின் சகோதரி மார்கரெட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ஆம் திகதி நடைபெறும் எனவும் பின்னர் கணவர் உடலுடன் சேர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Getty