சொந்த தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தனும்.. பாஜகவை தாக்கும் மஹூவா மொய்த்ராவை எச்சரித்த மம்தா

கொல்கத்தா: பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ராவை அவரது கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு ‛‛பிற விஷயங்கில் தலையிடாமல் சொந்த தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மூன்றாவது முறையாக அங்கு ஆட்சியை பிடித்த மம்தா பானர்ஜி ஹாட்ரிக் சாதனை படைத்து முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும்
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் கடும் போட்டி நிலவியது. இருப்பினும் பாஜகவை விட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

பாஜகவை தாக்கி பேசும் மஹூவா

அந்த சட்டசபை தேர்தல் முதல் தற்போது வரை பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் நீடித்து வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர்கள் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மம்தா பானர்ஜி உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மேடைகள், ட்வீட்டர்களில் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா பாஜகவை அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறார்.

மம்தா பானர்ஜி கண்டிப்பு

மம்தா பானர்ஜி கண்டிப்பு

2016ல் நாடியா அருகே கரீம்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வான மஹூவா மொய்த்ரா 2019ல் கிருஷ்ணகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியானார். நாடாளுமன்றத்திலும் சரி, ட்வீட்டரிலும் சரி பாஜக மற்றும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாடு உள்ள அமைப்பினரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் தான் மஹூவா மொய்த்ராவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக கண்டித்துள்ளார். நாடியா மாவட்டத்தின் கட்சியின் செயல்பாடு தொடர்பாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மஹூவா மொய்தாராவை மம்தா பானர்ஜி கண்டித்தார்.

என்ன கூறினார் மம்தா?

என்ன கூறினார் மம்தா?

இந்த கூட்டத்தில் மஹூவா மொய்த்ராவிடம், மம்தா பானர்ஜி கூறுகையில், ‛‛கரீம்பூர் தொகுதி என்பது உங்களுக்கான தொகுதி இல்லை. இது உங்களின் அதிகார வரம்புக்குள் வராது. அந்த தொகுதி என்பது முர்சிடாபாத் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி அபுதாஹீர் கவனிப்பார். இதனால் உங்கள் அதிகார வரம்புக்குள் இருக்கும் பகுதிகளை மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் தொகுதிகளை மட்டும் கவனிக்க வேண்டும்” என கண்டித்தார். அதாவது மஹூவா மொய்த்ராவின் சொந்த ஊர் கரீம்பூர் தொகுதிக்குள் உள்ளது. சொந்த ஊர், தொகுதி எம்எல்ஏவாக இருந்த செல்வாக்கில் தொடர்ந்து அவர் சில விஷயங்களில் தலையிட்டார். இதுபற்றி மம்தா பானர்ஜியிடம் புகார் சென்ற நிலையில் தான் இந்த கண்டிப்பு நடந்துள்ளது.

 மஹூவா மொய்த்ரா முகநூல் பதிவு

மஹூவா மொய்த்ரா முகநூல் பதிவு

இதையடுத்து மஹூவா மொய்த்ரா தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‛‛2016ல், மம்தா பானர்ஜியின் ஆசியாலும், உங்கள் அன்பாலும் கரீம்பூர் எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். 2016 முதல் 2019 வரை பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தேன். ரூ.149 கோடி மதிப்பிலான பணிகளை செய்தேன். கரீம்பூர் ஐடிஐ மற்றும் பிற கல்லூரிகள் வந்தன. 2019ல் கிருஷ்ணாநகரில் இருந்து எம்பியானேன். தற்போது கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்த கட்சி மேலிடம் கூறியுள்ளது. இதனால் கரீம்பூருக்கு என்னால் வர முடியாது. இருப்பினும்
கரீம்பூர் சட்டசபை தொகுதி வாக்காளர், முன்னாள் எம்எல்ஏ என்ற முறையில் அந்த தொகுதி மக்களிடம் என்னுடைய பந்தம் இருந்து கொண்டே இருக்கும். மேலும் எனது வேண்டுகோள் என்னவென்றால் வளர்ச்சி பணிகளுக்காக எம்பி அபுதாஹீரை தொடர்பு கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

முதல் முறை அல்ல

முதல் முறை அல்ல

மஹூவா மொய்த்ராவை, மம்தா பானர்ஜி கண்டிப்பது இது முதல் முறையல்ல. பல முறை அவர் கண்டித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், கட்சியின் உள் நிர்வாக கூட்டத்தில் மம்தா பானர்ஜி மொய்த்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதோடு சமீபத்தில் காளி படம் தொடர்பான மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்து இருந்தது பெரும் சர்ச்சையானது. இந்த விஷயத்தில் மஹூவா மொய்த்ராவின் கருத்து அவருடையது. இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல என மம்தா பானர்ஜி சார்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.