சுற்றுலா பயணிகளை கவருவதற்காக துபாய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நிலவு வடிவத்தில் ரிசார்ட் கட்டுவதற்கு துபாய் தற்போது தயாராகி வருகிறது என அரேபியன் பிசினஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிசார்ட் சுற்றுலா பயணிகளை பெருமளவு கவரும் என்றும் நிலவில் தங்குவதை போன்ற உணர்வுகள் இந்த ரிசார்ட்டில் தங்கும்போது கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இனி ரயிலிலும் வெளிநாடு சுற்றுலா போகலாம்.. சாமானிய மக்களுக்கு செம்ம வாய்ப்பு..! #IRCTC
நிலவு வடிவ ரிசார்ட்
துபாய் தற்போது அளவு உயரமான கட்டடங்கள் கட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறது என்பதும் சுற்றுலா பயணிகள் அதனால்தான் துபாய்க்கு குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனடா கட்டிட நிறுவனமான மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனம் துபாயில் நிலவு வடிவத்தில் ரிசார்ட் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ்
இதுகுறித்து மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக்கேல் ஹென்டர்சன் அவர்கள் கூறியபோது, துபாயில் நிலவு வடிவ ரிசார்ட் கட்டுவதற்கு ஒரு வருடம் திட்டமிட இருப்பதாகவும், கட்டிட பணிகளை நான்கு வருடத்தில் முடிக்க உள்ளதாகவும், 2027 அல்லது 2028ல் இந்த ரிசார்ட் திறக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுற்று லா பயணிகள்
துபாயில் உள்ள இந்த நிலவு வடிவ ரிசார்ட் ஆரோக்கியமாகவும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என்றும் விண்வெளி வீரர்கள் நிலவில் இருக்கும்போது எந்த வகையான உணர்வு ஏற்படுமோ அதே போன்ற உணர்வை இந்த ரிசார்ட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் மூன் வேர்ல்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக்கேல் ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.
நிலவின் அனுபவம்
நிலவில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்குவதற்கு சுற்றுலாப் பயணிகளிடம் 500 டாலர் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் ஆனால் உண்மையில் விண்வெளியில் உள்ள நிலவுக்கு செல்ல மில்லியன் கணக்கான டாலர் செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்னிய செலவாணி
இந்த நிலவு வடிவ ரிசார்ட் கட்டி முடிக்கப்பட்டால் துபாய்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதனால் அன்னிய செலவாணி துபாய்க்கு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலவு வடிவ ரிசார்ட் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Moon-shaped luxury resort planned for Dubai: ‘Space tourism on ground’
Moon-shaped luxury resort planned for Dubai: ‘Space tourism on ground’ | நிலவு வடிவத்தில் ரிசார்ட்.. துபாயின் வேற லெவல் திட்டம்!