அடேங்கப்பா.. 15 மனைவி.. 107 குழந்தைகள்.. ஒரே வீட்டில் ஒன்றாய் வாழும் நபர்.. சண்டையே இல்லை! பூரிப்பு

நைரோபி: கென்யாவில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மனைவிகள் இடையே சண்டை பொறாமை இல்லவே இல்லை என அவர் பெருமையாக கூறுகிறார்.

மனித வாழ்க்கையில் உள்ள முக்கிய உறவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று கணவன்-மனைவி. தனித்தனி வாழ்க்கை நடத்திய இருவரும் திருமண பந்தக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வதை அடிப்படை கொண்டது தான் இந்த கணவன்-மனைவி உறவு.

இந்தியாவில் ஒரு மனைவியையே சமாளிக்க முடியவில்லை என சிலர் புலம்பும் வகையில் ஒருவர் 15 திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கென்யாவை சேர்ந்த ஒரு நபர் தான் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குக்கிராமமாக வாழ்ந்து வருகிறார். அதுபற்றிய விபரம் வருமாறு:

கென்யா நபர்

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலலுயானா. இவர் தான் அந்நாட்டின் தற்போதைய கல்யாண ராமனாக உள்ளார். 61 வயது நிரம்பிய இவர் தற்போது வரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமமாக மாறியுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் மனைவிகள்

ஒரே வீட்டில் வசிக்கும் மனைவிகள்

தற்போதைய காலத்தில் ஒருவர் 15 திருமணம் செய்துள்ளார் என்பது ஆச்சரியாக உள்ள நிலையில் தான் அவர் அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்கிறது. இது உண்மையில் மிகப்பெரும் சாதனையாக தான் அந்நாட்டு பத்திரிகைகள் செய்து வெளியிட்டுள்ளன.

 வித்தைகள் தெரியும்

வித்தைகள் தெரியும்

இதுபற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான உள்ளார். அவருக்கு மொத்தம் 700 மனைவிகளும், 300 பெண் பார்ட்னர்களும் இருந்தனர். நான் எந்த விதத்திலும் சாலமோனை விட குறைந்தவர் இல்லை. நான் பல பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும். தற்போது ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை நான் கொடுத்து வருகிறேன். மனைவியின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தாலும் எனக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது” என்றார்.

பொறுப்பான மனிதர் எனக்கூறும் மனைவி

பொறுப்பான மனிதர் எனக்கூறும் மனைவி

இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்” என்றார். அவர்கள் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர். ஜெசிகாவும், டேவிட்டும் 1998 ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தது.

பழகிவிட்டோம் என சகித்து கொள்ளும் மனைவி

பழகிவிட்டோம் என சகித்து கொள்ளும் மனைவி

இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.