WI-FI Password : மறந்து போன wifi password-ஐ எப்படி கண்டு புடிப்பது?

பல நேரங்களில் நமது மொபைலில் டேட்டா தீர்ந்து அவதி பட்டிருப்போம்.

அவசரமாக இணையம் வழியாக ஏதாவது சேவையை பெற வேண்டும் என்று வரும்போது டேட்டா தீர்ந்து போயிருக்கும்.அப்போது அந்த இடத்தில் நாம் பயன்படுத்திய wifi இருந்தும் கடவுச்சொல்(password) தெரியாமல் செய்வதறியாது நின்றுக் கொண்டிருப்போம்.

ஆனால், உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் ஆன்ட்ராய்டு 10க்கு பிறகு அப்டேட் ஆன ஆன்ட்ராய்டு வெர்சன் என்றால் உங்கள் மொபைலில் நீங்கள் இதுவரை பயன்படுத்திய அனைத்து wifi முகவரியும் சேமிப்பில் இருக்கும். அதன் மூலம் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய wifi பாஸ்வோர்டுகளை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

அதற்கான வழிமுறைகள் என்னவென்பதை இந்த கட்டுரையில் காணலாம்.

Step 1:

உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள wifi பகுதிக்கு செல்லுங்கள்.

Step 2:

அதற்கு பிறகு நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய அல்லது சேமித்து வைத்த wifi நெட்வொர்க்கை கிளிக் செய்யுங்கள்.

Step 3:

அதற்குள் forget connect share என்று மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.

Step 4:

அதில் share என்பதை கிளிக் செய்தால் அந்த wifi முகவரிக்கான பாஸ்வோர்ட் உங்களுக்கு காட்டும். அதோடு சேர்த்து ஒரு QR கோட் காட்டும். அதன் வழியாகவும் அந்த wifi நெட்வொர்க்கில் இணைத்து கொள்ளலாம்.

Settings >wifi > saved networks > share > password

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.