அஞ்சலகத்தில் வழங்கப்படும் பிரபலமான திட்டங்களில் ஒன்று டைம் டெபாசிட். இன்றும் நடுத்தர மக்கள் மத்தியில் விருப்பமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.
இதில் வங்கி வட்டி விகிதத்தினை விட அதிகம் எனலாம். இந்த டைம் டெபாசிட் திட்டத்திலும் வங்கிகளில் உள்ளதை போல, 5 ஆண்டு திட்டங்கள் வரையில் உள்ளது.
கூடுதலாக வட்டி விகிதம் , வரி சலுகை என பல முக்கிய அம்சங்களும் கிடைக்கிறது. இந்த டெபாசிட் கணக்கினை தொடங்க குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச லிமிடெட் என எதுவும் கிடையாது.
குறுகிய காலத்தில் பிரபலமான யூடியூப் ஷார்ட்ஸ்: எத்தனை மில்லியன் யூசர்ஸ் தெரியுமா?
எனென்ன திட்டங்கள்
டைம் டெபாசிட்டினை பொறுத்தவரையில் 1 வருட டெபாசிட் திட்டம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம் என டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இதில் ஓராண்டு, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு வட்டி விகிதம் 5.5% ஆகும். இதே 5 ஆண்டு திட்டத்தில் 6.7% வட்டி விகிதமாகும். இதே தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு 5.8% வட்டி விகிதமாகும்.
பல காலாண்டுகளாகவே வட்டி விகிதம் அதிகரிக்கப்படாமல் அப்படியே உள்ளது. இதி விரைவில் அதிகரிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெகிழ்வான விஷயங்கள்
இந்த திட்டங்களை நேரடியாக சென்று அஞ்சலகத்திலும் தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலும் தொடங்கிக் கொள்ளும் வசதியும் உண்டு. முன் கூட்டியே முடித்துக் கொள்ளும் வசதியும் உண்டு.
ஆரம்பத்தில் குறைவாக முதலீடு செய்தாலும், இடையில் அதிகரித்துக் கொள்ளும் வசதியையும் கொண்டுள்ளது.
கவனிக்க வேண்டியது என்ன?
இந்த கணக்கினை ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் முடித்துக் கொள்ளலாம். ஒரு தனி நபர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் வரம்பற்ற தொகையை முதலீடு செய்து கொள்ளலாம். அதோடு இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
வரி சலுகை
இந்த டெர்ம் டெபாசிட்டில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச்சலுகை கிடைக்கும். இந்த வரிச் சலுகையானது லாகின் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
முன் கூட்டியே முடித்துக் கொள்ளலாமா?
இந்த டெபாசிட் திட்டத்தினை தொடங்கிய ஆறு மாதத்திற்கு முன்பு முடித்துக் கொள்ள முடியாது. இந்த டைம் டெபாசிட் அக்கவுண்ட்டினை முன் கூட்டியே முடித்துக் கொள்ள Application for pre mature closure of account என்பதை பூர்த்தி செய்து, அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டும். இதனுடன் பாஸ்புக்கினையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். எனினும் விரைவில் இந்த செயல்பாட்டினை முடித்துக் கொள்ள ஆன்லைனில் கொடுக்கலாம்.
Post office term deposit: interest rate, tax benefit and other key details here
Post office term deposit: interest rate, tax benefit and other key details here