கடன் வாங்காமல் இருக்க வேண்டும் என்று தான் பலரும் நினைப்போம். ஆனால் மாத கடைசி என்றாலே கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம். இது மாத சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.
எனினும் சில கடன்களை வாங்குவதை தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏன் குறிப்பிட்ட கடன்களை மட்டும் தவிர்க்க கூறுகிறார்கள். அதற்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்.. எச்சரிக்கையா இருங்கப்பு..!
பேடே லோன்
நிலவி வரும் காலகட்டத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது தான், ஆனால் பேடே லோன் என்ற தினசரி கடன்களை தவிர்ப்பது மிக அவசியம். குறிப்பாக இதுபோன்ற கடன்களை சிறு தொழில் செய்வோர், சிறு கடைக்காரர்கள், தினசரி மார்கெட்டில் கடை வைத்துள்ளவர்கள் தனி நபர்கள் என வாங்குவார்கள். காலையில் வாங்கி மாலை செலுத்த வேண்டியிருக்கும். இந்த வகையான கடன்களுக்கு வட்டி மிக அதிகம் எனலாம். ஆக இதனை தவிர்ப்பது மிக அவசியம்.
கார் டைட்டில் லோன்
கார் டைட்டில் லோன் என்பது பொதுவாக அதிக வட்டி விதிக்கப்படும் கடனாகும். இது நம்மூரில் கொடுக்கப்படும் ஸ்டேட்ண்டிங் பைனான்ஸ் போல என வைத்துக் கொள்ளலாம். நீங்கள் உங்கள் வாகனத்தினை கொடுத்து விட்டு, ஒரு மாதத்தில் வட்டியும் முதலுமாக திரும்ப கட்டிவிட்டு பெற்றுக் கொள்ளலாம். பொதுவாக இதுபோன்ற கடனில் வட்டியும் அதிகம். குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தாவிட்டால் வாகனம் விற்பனை செய்யப்படலாம்.
கிரெடிட் கார்டு அட்வான்ஸ்
கிரெடிட் கார்டை தேவையில்லாமல் பயன்படுத்த வேண்டாம் என சூழலில், சிலர் கிரெடிட் கார்டு மூலமாக எடுக்கும் அட்வான்ஸ் தொகையை எடுப்பர். அதன் பின்னர் வட்டி வட்டி என கட்டிக் கொண்டே இருக்கலாம். இதில் வட்டி விகிதம் மிக அதிகம். நீங்கள் இதனை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால், அதற்கு அபராத தொகையும் மிக அதிகம்.
கேசினோ லோன்
இது போன்ற கடன்கள் இந்தியாவில் மிக குறைவு. எனினும் இதுபோன்ற கடன்கள் தவிர்க்கப்பட வேண்டிய கடன்களாக உள்ளன. இதுபோன்ற கடன்கள் வெளிநாடுகளில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது.
அடகு கடை லோன்
பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். பொதுவாக நம்மிடம் இருக்கும் நகைகளை அடகு வைத்து இதுபோன்ற கடன்களை பெறுவது வழக்கம். இதுபோன்ற கடனை சரியான நேரத்தில் செலுத்தவில்லை எனில் உங்களது பொருள் ஏலத்தில் விடப்படலாம். கிராமப்புறங்களில் அதிக விலையுள்ள ஒரு சொத்திற்கு குறைந்த தொகையை கொடுத்து கட்டுப்படுத்தப்படும் கடன்கள் இதில் அடங்கும்.
What are loans to avoid? check details
What are loans to avoid? check details/அவசியம் தவிர்க்க வேண்டிய 10 கடன்கள்.. ஏன் தெரியுமா?