இந்தியாவில் 2 வருடம் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு சரிவு.. என்ன காரணம்?

இந்தியாவில் அந்நிய செலாவணி இருப்பு இரண்டு வருடம் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

795 பில்லியன் டாலராக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு 533.1 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

2020 அக்டோபர் 9-ம் தேதிக்கு பிறகு இந்து மிகப் பெரிய சரிவாக உள்ளது.

டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!

என்ன காரணம்?

என்ன காரணம்?

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியால் டாலர்கள் விற்பனை சரிந்ததே இதற்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80.1288 என்ற புதிய குறைந்தபட்ச மதிப்பை எட்டிய பின்னர், ரூபாய் சரிவைத் தடுக்க மத்திய வங்கி அதன் அந்நிய செலாவணி இருப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியது.

 ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

ஜனவரி மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 சதவீதம் வரை சரிந்துள்ளது. பிற ஆசிய கரன்சிகளுடன் ஒப்பிடும் போது ரூபாய் மதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகக் கிட்டத்தட்ட 80 ரூபாயாக மதிப்பு இருந்து வருகிறது.

கச்சா எண்ணெய்
 

கச்சா எண்ணெய்

பிரண்ட் கச்சா எண்ணெய் விலை இப்போது சற்று குறைந்துள்ளதால் இந்தியாவுக்கு அந்நிய செலாவணி இருப்பு செலவு சற்று குறையும். டாலர் மதிப்பு கடந்த சில நாட்களாகச் சற்று பலவீனமாக உள்ளது ரூபாய்க்குச் சாதமாக உள்ளது.

அந்நிய செலாவணி என்றால் என்ன?

அந்நிய செலாவணி என்றால் என்ன?

உலக நாடுகளிடையில் வணிகப்பரிமாற்றத்தின் போது ஏற்படும் நாணய மதிப்பீடே ‘அந்நியச் செலாவணி’ என அழைக்கப்படுகிறது. இந்த அந்நியச் செலாவணியின் மதிப்பீடு ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கும். இது நிலையாக இருப்பதில்லை. அன்றாட உலக வர்த்தகத்திற்குத் தகுந்தாற் போல மதிப்பு ஏறும். அல்லது இறங்கும்.

சாமானியனுக்கு என்ன பாதிப்பு?

சாமானியனுக்கு என்ன பாதிப்பு?

அந்நிய செலாவணி தனி ஒரு நபரினை பாதிப்பது இல்லை. ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப் பட்ட வணிக நிறுவனங்கள் இதனால் பாத்கிக்கப்படும். ரூபாய் மதிப்பு சரியும் போது ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக பயன் பெறும்.

ஏன் அந்நிய செலாவணி முக்கியம்?

ஏன் அந்நிய செலாவணி முக்கியம்?

உலக நாடுகள் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதிலே அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதனைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை ஏனைய நாடுகள் எடை போடுகின்றன. பண மதிப்பீட்டில் அதிக ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, வெளிநாட்டு பணசந்தையில் தலையீடு செய்ய,அரச வெளிநாட்டுக் கடன்களைச் சமாளிக்க, எதிர்பாராத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேற்றத்தைச் சமாளிக்கச் செலாவணி கையிருப்பு அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Forex Reserves Fall To Lowest In Nearly 2 years. Why?

Forex Reserves Fall To Lowest In Nearly 2 years. Why? | இந்தியாவில் 2 வருடம் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு சரிவு.. என்ன காரணம்?

Story first published: Saturday, September 10, 2022, 11:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.