31வது திருமண நாளை கொண்டாடிய நடிகை ராதாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் – நடிகை ராதா
பிரபல நடிகை ராதா தனது 31வது திருமணநாளை கொண்டாடினார்.
80களில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்தவர் ராதா.
சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து உச்ச நட்சத்திரங்களுக்கும் ஜோடியாக நடித்த ராதா, தனது நடிப்பு மட்டுமன்றி நடனம், வசனம் என தனித்துவமான திறமையினால் ரசிகர்களை ஈர்த்தவர்.
திரைத்துறையில் பொதுவாக திருமணம் செய்துகொண்ட பலரும் நீண்ட நாட்களாக மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால், நடிகை ராதா அதனை உடைக்கும் வகையில் தனது 31வது திருமணநாளை கணவருடன் கொண்டாடியுள்ளார்.
கணவர் அவருக்கு அளித்த அழகான கம்மலை அணிந்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள திருமணம் குறித்த பதிவில்,
‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. உங்களுக்கு சரியான நபர் இருந்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். எனது கணவரும், எங்கள் குழந்தைகளும் சொர்க்கத்தை முழுமையாக்குகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் ராதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.