அரசு ஊழியர்களின் அமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாநாடு இன்று மாலை சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது பின்வருமாறு :
“நீங்கள் தீவித்திடலில் கூடியுள்ளீர்கள்; ஆனால் நீங்கள் தனித்திவீல் அல்ல. கோட்டையை உள்ளடக்கியது தான் உங்கள் தீவு. உங்களில் ஒருவனாக பெருமையோடு பூரிப்போடு நிற்கிறேன். நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்களின் ஊழியன். அரசும் அரசியலும் இரண்டற கலந்தது அதனை யாராலும் பிரிக்கமுடியாது.
அரசு ஊழியர் மாநாட்டில் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தாலும் இங்கு பேசாமல் வேறெங்கு பேசுவது. 6-வது முறையாக ஆட்சியை பிடிக்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் அத்தகைய நன்றி உணர்வோடு நிற்கிறேன். நம்முடைய ஆதரவு முதல்வருக்கும் அரசிற்கு எப்போதும் உண்டு என தெரிவித்துள்ளீர்கள். இதற்காகவே நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம்.தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர்
அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் “அக்டோபர் 15ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஆன்லைன் மூலமாக வெளிப்படையாக நடக்கும்.அரசு கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்கு பணம் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் இலக்கு அல்ல நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற தேவையான பணம் இருந்தால்போதும் என்று நினைக்கிறோம்.
அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள்.இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி.அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன். நீங்களும் நானும் வேறு வேறு அல்ல” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.