மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் பென்ஷன் திட்டத்தை பாருங்க..!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு எண்ணம், இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது ஒரு நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும். வயதான காலத்தில் யாரையும் சாராமல் குறிப்பாக நிதி ரீதியாக சாராமல் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அப்படி ஒரு திட்டத்தினை எல்ஐசி கொண்டுள்ளது. அதுவும் ஒற்றை பிரீமியம் மூலம் மாத மாத வருமாமனம் கிடைக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது.

இது மாத சம்பளம் போல வயதான காலகட்டத்தில் கிடைப்பதால், வயதானவர்கள் யாரையும் நிதிக்காக சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

சாமானியர்களுக்கு அஞ்சலகத்தின் டெர்ம் டெபாசிட்.. வங்கி வட்டியை விட அதிகம்..!

பென்ஷன் திட்டம்

பென்ஷன் திட்டம்

ஆக இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மட்டும் அல்ல, தனியார் ஊழியர்கள், பெண்கள், வயதானவர்கள் என பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் எல்ஐசி-யின் சாரல் திட்டத்தின் மூலம் இந்த சலுகையினை பெற முடியும். இது பாதுகாப்பானதாக இருப்பதோடு சந்தை அபாயமும் இருப்பதில்லை.

சாரல் பென்ஷன் திட்டம்

சாரல் பென்ஷன் திட்டம்

எல்ஐசி-யின் சாரல் பென்ஷன் திட்டத்தின் ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் போதும். பாலிசியினை தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும்.இதனால் வட்டி அதிகரிக்கப்பட்டால் பலன் அதிகமாகவும், வட்டி குறைத்தால் பலன் குறையும் என்ற பிரச்சனையும் இல்லை.

வயது வரம்பு
 

வயது வரம்பு

இந்த பாலிசியினை 40 வயது எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 80 வயது வரையில் இந்த சாரல் பாலிசியினை எடுத்துக் கொள்ளலாம். பாலிசிதாரர் இந்த திட்டத்தினை எடுக்கும்போது அதிக தொகையினை ஒரே பிரீமியமாக செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பாலிசிதாரர் அவரின் வாழ் நாள் முழுவதும் ஒரு வருமானத்தினை பெறலாம்.

பாலிசிதாரர் இறக்கும் வரை பலன்

பாலிசிதாரர் இறக்கும் வரை பலன்

முதல் வகை தனி நபர் பாலிசி – 100% திரும்ப தரும் பிரீமியம். இந்த பாலிசியில் பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையில் பலனை பெற்றுக் கொள்ளலாம். பாலிசிதாரர் இறந்து விட்டால் பலன் கிடைக்காது. அடிப்படை பிரீமியத் தொகை மட்டும் நாமினிக்கு திரும்ப செலுத்தப்படும்.

ஜாய்ண்ட் லைஃப் பாலிசி

ஜாய்ண்ட் லைஃப் பாலிசி

இரண்டாவது திட்டத்தில் கணவன், மனைவி என இருவருக்கும் கவரேஜ் கிடைக்கும். முதன்மை ஓய்வூதியதாரர் இருக்கும் வரையில் அவருக்கு ஓய்வூதியம் கிடைகும். அவர் இறந்த பிறகு அவரின் மனைவிக்கு வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைகும். அவர் இறந்த பிறகு நாமினிக்கு அடிப்படை பிரீமியத் தொகை மட்டும் நாமினிக்கு திரும்ப செலுத்தப்படும்.

எவ்வளவு செலுத்தலாம்?

எவ்வளவு செலுத்தலாம்?

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12,000 ரூபாய் தொகையாவது செலுத்த வேண்டும். அதாவது மாதம் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. ஆண்டு ஆரையாண்டு, மாதாந்திர முறைகளில் தொகையை செலுத்தவும் வசதி உண்டு.

கடன் வசதி உண்டா?

கடன் வசதி உண்டா?

இந்த பாலிசியினை பெற்ற ஆறு மாதத்திற்கு பிறகு கடன் பெறலாம். 6 மாதத்திற்கு பிறகு சரண்டர் செய்யலாம். பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் இறந்து விட்டால், நாமினி பிரீமியம் தொகையை பெறுவார்கள். இந்த பாலிசியில் முதிர்ச்சி பலன் என்பது கிடையாது. மொத்தத்தில் பாலிசியின் மூலம் மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC Saral pension yojana: pay a single premium and get Rs.50,000 every month

LIC Saral pension yojana: pay a single premium and get Rs.50,000 every month /மாதம் ரூ.50,000 பென்ஷன் வேண்டுமா.. LIC-யின் சாரல் பென்ஷன் திட்டத்தை பாருங்க..!

Story first published: Saturday, September 10, 2022, 20:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.