சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கும் அதன் ஏற்பாடுகளுக்கும் Operation Golden Orb என ரகசிய குறியீடு…
தற்போதைய சூழலில், முடிசூட்டு விழாவில் அவ்வாறான ஆடம்பரங்களை பிரித்தானிய மக்கள் ஏற்க வாய்ப்பில்லை
பிரித்தானிய ராணியாரின் மறைவை அடுத்து, எதிர்வரும் நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் ஒருபக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், குறித்த விழாவானது பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்குகள் முடிக்கப்பட்டு, 7 நாட்கள் அரச குடும்பத்து உறுப்பினர்கள் துக்கமனுசரிக்கப்பட்டு, அதன் பின்னரே முன்னெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
@getty
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கும் அதன் ஏற்பாடுகளுக்கும் Operation Golden Orb என ரகசிய குறியீடு வழங்கியுள்ளனர்.
ராணியார் மறைவுக்கு பின்னர் உடனடியாக சார்லஸ் மன்னராக அறிவிக்கப்பட்டாலும், இன்னும் சில மாதங்களில் அதிகாரப்பூர்வ விழாவில் அவர் முடிசூட்டப்படுவார்.
1953ல் ராணியாரின் முடிசூட்டு விழாவானது மிக ஆடம்பரமாக, அப்போதைய மதிப்பில் சுமார் 1.57 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. அதன் தற்போதைய மதிப்பு 46 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.
@ap
ஆனால் தற்போதைய சூழலில், அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படவிருக்கும் முடிசூட்டு விழாவில் அவ்வாறான ஆடம்பரங்களை பிரித்தானிய மக்கள் ஏற்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
அரண்மனை வட்டாரங்களில் கசிந்த தகவலின் அடிப்படையில், மிக மிக எளிமையாக, குறைவான விருந்தினர்கள் மத்தியில், மிக விரைவாக விழா முடிவடையும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றே தெரியவந்துள்ளது.
@Shutterstock
மேலும், ராணியார் இரண்டாம் எலிசபெத் எடுத்துக்கொண்ட உறுதி மொழிகள் அப்படியே முன்னெடுக்கப்படும், ஆனால் சில மாறுதல்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், விழாவிற்கு பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் மொத்த அரச குடும்பத்து உறுப்பினர்களும் காட்சியளிக்க வாய்ப்பில்லை எனவும்,
இந்தமுறை மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட், இவர்களின் பிள்ளைகள் மட்டுமே பொதுமக்களுக்கு காட்சி தருவார்கள்.
மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவிலேயே கமிலாவும் புதிய பொறுப்புக்கு முடிசூட்டப்படுவார்.
மட்டுமின்றி, முடிசூட்டு விழாவிற்கு பயன்படுத்தப்படும் சிறப்பு உடைகளை கமிலா பயன்படுத்துவார்.
@getty
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் 2023 கோடைகாலத்தில் இருக்கும் என்றே அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன.