”என் கணவரை விளையாட அனுப்புறேன்”.. மேடையிலேயே மணமகளிடம் ஒப்பந்தம் போட்ட நண்பர்கள்!

உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பின்னும் தங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணமகனின் நண்பர்கள் மணமகளிடம் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத். தேனியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ள இவர் கிரிக்கெட் விளையாட்டிலும் கெட்டிக்காரர் என கூறப்படுகிறது.
image
இந்நிலையில் ஊரிலுள்ள சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள ஹரிபிரசாத்துக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா என்பவருக்கும் நேற்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
image
இந்த திருமணத்தின் போது பத்திரத்துடன் வந்த மணமகனின் நண்பர்கள் ஹரிபிரசாத்தை திருமணத்திற்கு பின்னரும் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மணமகள் சம்மதம் தெரிவிப்பது போன்ற சம்மதபத்திரத்தில் (பாண்ட் பத்திரம்) கையெழுத்திட வைத்து திருமணவிழாவை அதிர வைத்துள்ளனர்.
image
திருமணத்திற்கு பின்னர் மணமகனை விளையாட்டுகளில் கலந்து கொள்ள மனைவிமார்கள் தடுக்கும் சூழலில் மணமகனின் நண்பர்களின் இந்த சம்மத ஒப்பந்த பத்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.