ராணியாருக்காக… வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி – மேகன்

ஹரி மற்றும் மேகனை மலர் அஞ்சலி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வில்லியம் அழைப்பு விடுத்ததாக…

இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியது முதன்மையான கடமை 

மொத்த கருத்துவேறுபாடுகளையும் மறந்து ராணியாருக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஒன்றாக பொதுமக்களுக்கு காட்சி அளித்துள்ளனர்.

வின்ட்சர் கோட்டையில் மேகன் மெர்க்கல் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோருடன் சகோதரர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஒரே காரில் வந்துள்ளனர்.
ராணியாருக்காக பொதுமக்கள் செலுத்தியிருந்த மலர் அஞ்சலிகளை சகோதரர்கள் இருவரும் பார்வையிட்டுள்ளனர்.

ராணியாருக்காக... வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி - மேகன் | Mourn Queen William Inviting Brother

@pa

கேட் மற்றும் மேகன் இருவரும் பெர்க்ஷயர் எஸ்டேட்டின் வாயில்களை விட்டு வெளியேறும்போது கருப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர்.
நால்வரும் ஒன்றாக நடந்து வருகையில், ஹரி தமது மனைவியின் கரத்தைப் பற்றியிருந்தார். கணவர் ஹரியின் அருகாமையிலேயே அவருக்கு ஆதரவாக நின்றிருந்தார் மேகன்.

பொதுமக்களில் ஒருவர் பூங்கொத்து ஒன்றை மேகன் மெர்க்கலுக்கு பரிசளிக்க, அவர் அதை முகம் மலர வாங்கிக்கொண்டார்.
இதனிடையே திரண்டிருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் உரையாற்றினார்.

ராணியாருக்காக... வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி - மேகன் | Mourn Queen William Inviting Brother

@getty

ஹரி மற்றும் மேகனை மலர் அஞ்சலி வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல தம்முடன் வருமாறு வில்லியம் அழைப்பு விடுத்ததாகவும் அரண்மனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் குடும்பத்தினரின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியது முதன்மையான கடமை என வில்லியம் நம்புவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், இதுவரையான மனக்கசப்புகளை மறக்க வில்லியம் தயாராக இருப்பதாகவே இது குறிப்பிடுகிறது என்கின்றனர்.

ராணியாருக்காக... வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி - மேகன் | Mourn Queen William Inviting Brother

@ap

மட்டுமின்றி, சகோதரர்கள் இருவரும் ஒருசில வார்த்தைகள் பேசிக்கொண்டதும், அங்கு திரண்டிருந்த மக்களை மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய வைத்தது.
இரு சகோதரர்களும் கடைசியாக ஜூன் மாதம் ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தின் போது பொதுவில் ஒன்றாகக் காணப்பட்டனர்.

ஆனால் அப்போது இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டதுடன், தனித்தனியாகவே புறப்பட்டு சென்றனர்.
தற்போது ராணியாரின் மறைவை அடுத்து இருவரும் ஒரே வாகனத்தில் பயணப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் ராணியாருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ராணியாருக்காக... வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி - மேகன் | Mourn Queen William Inviting Brother

Credit: Ian Whittaker

ராணியாருக்காக... வில்லியம் தம்பதியுடன் ஒன்றிணைந்த ஹரி - மேகன் | Mourn Queen William Inviting Brother

@reuters

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.