மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா(Nigeria) நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஒயோ(Oyo) மாகாணத்தில் உள்ள இபரபா நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த சொகுசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியது.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பேருந்து மற்றும் கார் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், இரு வாகனங்களும் பயணம் செய்த 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இங்கிலாந்தியின் புதிய மன்னராக பதவி ஏற்ற சார்லஸ்..! – முதல் கன்னி உரையில் பேசியது என்ன..?
மோசமான நெடுஞ்சாலையே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நைஜீரியாவை பொறுத்தவரையில், கடந்தாண்டு நிகழ்ந்த 10,637 சாலை விபத்துகளில் 5,101 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 30,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும்
காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.