கால்நடை மருத்துவ படிப்புக்கு நாளை ( செப்-12) முதல் விண்ணப்பிக்கலாம்.! 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி), பி.வி.எஸ்சி – ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இந்த நிலையில், அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Bachelor of Veterinary Science & Animal Husbandry – B.V.Sc & AH (5 ஆண்டுகள்),
B.Tech., Food Technology (4 ஆண்டுகள்),
B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள்),
B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்) என்ற 4 வகையான படிப்புகளில் சேர https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் நாளை (செப்டம்பர் 12-ம் தேதி) முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.