தேங்காய் மிகவும் நல்லது. தேங்காய் தண்ணீரில் வைட்டமின்கள், ஆரோக்கியமான சர்க்கரை, அமினோ அமிலங்கள், சைட்டோகைன், பைட்டோஹார்மோன்கள், எலக்ட்ரோலைட்டுகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பல தாதுக்கள் உள்ளன.
தேங்காய் நீரில் கலோரிகள் குறைவு. எனவே எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தினமும் காலை எழுந்தவுடன், தேங்காய் நீர் பருகினால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் உதவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
தேங்காய் தண்ணீரில் மெக்னீசியம் உள்ளது. எனவே, தலைவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் தேங்காய் தண்ணீர் பருகலாம்.
தேங்காய் தண்ணீரில், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
தேங்காய் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல், அல்சர் போன்றவையும் குணமாகும்.
இளம் தேங்காய் தண்ணீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது. ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம். குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.
தேங்காய் தண்ணீர், உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, மற்றும் சிறுநீரகங்களில் நச்சுத்தன்மை குவியவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அது, சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுப்பதிலும் உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“