மனைவியை நடுநோட்டில் இறக்கிவிட்டு மச்சினிச்சியை கடத்திய காவல் உதவி ஆய்வாளர் பணி நீக்கம்!

மனைவியின் தங்கையை கடத்திய விவகாரம் தொடர்பாக கூடலூர் காவல் உதவி ஆய்வாளரை பணிநீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). காவல் உதவி ஆய்வாளரலான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோபி மதுவிலக்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தபோது, மனைவியின் தங்கையை திருமணம் முடிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் பல்வேறு வகையில் திட்டமிட்டுள்ளார்.
இதனால் 2018 ஆம் ஆண்டு பி.எட் படித்து வந்த மனைவியின் தங்கையிடம் மதுரையில் உள்ள கோவிலுக்குச் செல்லலாம் என்று கூறிய வெங்கடாசலம் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையுடன் ஈரோட்டில் இருந்து மதுரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது மதுரை அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடியில் தனது மனைவியை இறக்கி விட்டு விட்டு மனைவியின் தங்கையை மட்டும் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.
image
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி இதுகுறித்து சோதனைச்சாவடியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறை போலீசாரின் உதவியுடன் வெங்கடாசலத்தை மதுரைக்கு செல்லும் வழியில் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடாசலம் மனைவியின் தங்கையை கடத்திச் சென்றது உறுதியானது. இதைத்தொடர்ந்து கடத்தல் வழக்குப் பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த வெங்கடாசலம் மீண்டும் பணியில் சேர்ந்தார். இதன் பின்னர் கொரோனா காலகட்டத்தில் அவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மனைவி கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெங்கடாசலத்தை பணி நீக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
image
நீலகிரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டல போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.