இளவரசி டயானா செய்த எச்.ஐ.வி தொண்டு பணிகளை மகாராணி தடுக்க முயன்றதாக எழுந்த விவாதம்.
அது தொடர்பில் பேசிய டயானாவின் முன்னாள் பாதுகாவலர் கென் வார்பி.
இளவரசி டயானா எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான தொண்டு பணிகளை செய்ததை மறைந்த எலிசபெத் மகாராணி ஏற்கவில்லை எனவும், அதை அவர் தடுக்க முயன்றார் எனவும் தற்போது சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார்.
இதையடுத்து ராணி தொடர்பான செய்திகள் தான் தற்போது வரை சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இளவரசி டயானா எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தொண்டு பணிகளை செய்ததை மகாராணி தடுக்க முயற்சித்ததாக ஒரு பதிவு டுவிட்டரில் வைரலானது.
1981 இல் சார்லஸை மணந்த டயானா, ஏப்ரல் 9, 1987 இல் லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவர் அதிகாரப்பூர்வமாக HIV/AIDS நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் பிரத்யேக மருத்துவ வார்டைத் திறந்தார்.
JAYNE FINCHER/GETTY IMAGES/ANWAR HUSSEIN/WIREIMAGE
அங்கு எந்த கையுறையும் அணியாமல் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளியின் கையை குலுக்கி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலம் அந்த நோய் பரவும் என தவறாக பரப்ப்பட்ட தகவலை முறியடிக்கவே டயானா அவ்வாறு செய்தார்.
இதோடு இந்தோனேசியாவில் உள்ள தொழுநோய் மருத்துவமனையையும் பார்வையிட்டார், அங்கு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் கட்டப்பட்ட காயங்களைத் தொட்டுப் பார்த்திருக்கிறார்.
இதனிடையில் டுவிட்டரில் வெளியான அந்த பதிவில், டயானாவின் இந்த தொண்டு பணியை மகாராணி தடுத்து நிறுத்த முயன்றார்.
மேலும் தனது மருமகளிடம், வேறு எதாவது இனிமையான மற்றும் மகிழ்வூட்டும் பணியை செய்யுமாறு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
During the 1980s, the queen tried to stop Princess Diana’s work in HIV advocacy, telling her to do something “more pleasant.” But Diana ignored her, instead using her platform to tackle stigma and offer comfort to terrified people sick with what was then a terminal illness. pic.twitter.com/ppRCXqCs3T
— Philip Proudfoot (@PhilipProudfoot) September 8, 2022
இது தொடர்பாக டயானாவின் முன்னாள் பாதுகாவலர் கென் வார்பி முன்னர் கூறுகையில், ஒருமுறை ராணியிடம் பேசிவிட்டு வந்த போது டயானா வருத்தமாக இருந்தார்.
ஏன் இப்படி இருக்கிறீர்கள் என நான் கேட்டதற்கு, நான் எய்ட்ஸ் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பது ராணிக்கு பிடிக்கவில்லை, நீ ஏன் இன்னும் இனிமையான மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய வேறு விஷயங்களில் ஈடுபடக்கூடாது என அவர் கேட்டார்.
பின்னர் டயானாவுக்கு கோபம் வந்தது, நான் செய்யும் பணியை ராணி பார்க்கவே இல்லை, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பிரச்சாரங்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட வேண்டும் என தான் விரும்பியதாக டயானா தன்னிடம் கூறியதாக கென் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் அரண்மனை இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், நவம்பர் 2007 இல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உகாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை காண சென்ற மகாராணி அங்கு சிகிச்சையில் இருந்த நோயாகளுக்கு கைகுலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
POOL/GETTY IMAGES