'நோட்டா' போட்டி கட்சிக்கு பதிலடி கொடுங்கள்' – அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்

மாவட்ட இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசு பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், இளைஞர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

“234 தொகுதிகளில் குளித்தலை தொகுதி மிகவும் சிறப்பு பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களை முதன் முதலில் சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி இது. மேலும், குளித்தலையில் தலைவரின் திருவுருவச் சிலை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், குளித்தலை பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர்

ரூ.750 கோடி மதிப்பில் மருதூர் முசிறி காவேரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும், கலைஞரின் பொற்கால ஆட்சிக் காலத்தில் குளித்தலை தொகுதிக்கு அரசு கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர், வட்டார பகுதி போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டது. குளித்தலை தொகுதி என்றும் தமிழக முதல்வரின் கவனத்தில் இருந்து வருகிறது விரைவில் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

காவிரி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் தீர்த்த குடம் எடுத்துச் சென்று வழிபாடு.

தொடர்ந்து பேசிய அவர் இளைஞர்களாகிய உங்களின் இலக்கு வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியிலும் திமுக மகத்தான வெற்றி பெற இளைஞர் அணியினர் தீவிரமாக கட்சி பணி செய்திட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் நமது அரசை குறை கூறும்போது சமூக வலைதளங்களில் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்து கருத்து மோதல்கள் இருக்க வேண்டும், ஆனால் நேரடியாக எந்தவித மோதலும் இருக்கக் கூடாது.

நோட்டாவுடன் போட்டியிடக்கூடிய கட்சியினர் கூறும் தவறான கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஆட்சியையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாகவும், கூறி அனைவரையும் சமமாக பார்ப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், இந்த பாசறை கூட்டத்தில் மாநில சுயாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெயரஞ்சன், திராவிட மிக்க வரலாறு என்ற தலைப்பில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி கலந்துரையாடினார் இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சக்திவேல் துணை அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் எம்எல்ஏக்கள் மாணிக்கம் சிவகாமசுந்தரி இளங்கோ மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இந்த பாசறை கூட்டத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக இளைஞரணி பொறுப்பாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.