குஜராத் சுபலட்சுமி நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி.. ரிலையன்ஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதானி குழுமத்திற்கு இணையாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் துவங்கியுள்ளது நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் ஒரு சிறு வித்தியாசம்.

அதானி குழுமம் தொடர்ந்து புதிய துறையிலும், புதிய பிரிவிலும் தனது அனுபவம் இல்லாத துறையிலும் அதிகப்படியான கடை கிடைக்கும் காரணத்தால் வேகமாக வேகமாக நுழைந்து வருகிறது.

ஆனால் முகேஷ் அம்பானி புதிய துறையில் இறங்கினாலும் அத்துறையில் இயங்கி வரும் நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது மூலம் விரிவாக்கம் செய்கிறார் அல்லது ஏற்கனவே இயங்கி வரும் துறையில் இருக்கும் போட்டி நிறுவனத்தை வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்கிறார்.

இப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கிய நிறுவனம் தான் சுபலட்சுமி.

தமிழ்நாட்டு நிறுவனத்தை வாங்கும் முகேஷ் அம்பானி..? மாஸ்டர் பிளான் தான்..!

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-இன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பெட்ரோலியம் ரீடைல் லிமிடெட், சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ் லிமிடெட் (எஸ்பிஎல்) மற்றும் சுபலட்சுமி பாலிடெக்ஸ் லிமிடெட் (எஸ்பிடெக்ஸ்) ஆகிய நிறுவனங்களின் பாலியஸ்டர் வணிகத்தை மொத்தமாக வாங்க உள்ளார்.

1600 கோடி ரூபாய் டீல்

1600 கோடி ரூபாய் டீல்

இதில் சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ்-ஐ ரூ. 1,522 கோடி மற்றும் சுபலட்சுமி பாலிடெக்ஸ் லிமிடெட்-ஐ ரூ. 70 கோடி என மொத்தம் 1,592 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. இவ்விரு நிறுவனத்தையும் மொத்தமாக வாங்கவில்லை, ஆனால் பாலியஸ்டர் வணிகத்தை அதைச் சார்ந்த உற்பத்தி தளத்தை மட்டுமே ரிலையன்ஸ் பெட்ரோலியம் ரீடைல் லிமிடெட் வாங்குகிறது.

பாலியஸ்டர் வணிகம் விரிவாக்கம்
 

பாலியஸ்டர் வணிகம் விரிவாக்கம்

இந்தக் கைப்பற்றல் மூலம் ரிலைலயின் தனது டவுன்ஸ்ட்ரீம் பாலியஸ்டர் வணிகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்கிறது. சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ் மற்றும் சுபலட்சுமி பாலிடெக்ஸ் இணைந்து வருடத்திற்கு 2300 முதல் 3000 கோடி ரூபாய் வரையிலான விற்றுமுதல் கொண்டு உள்ளது. ஆனால் கடந்த 3 வருடத்தில் தொடர் சரிவு பதிவாகியுள்ளது.

சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ்

சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ்

சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 2,52,000 மில்லியன் டன்களின் தொடர்ச்சியான பாலிமரைசேஷன் திறனைக் கொண்டுள்ளது மற்றும் பாலியஸ்டர் ஃபைபர், நூல்கள் மற்றும் டெக்ஸ்டைல் தர சிப்ஸ்-களை நேரடி பாலிமரைசேஷன் வழி மற்றும் எக்ஸ்ட்ரூடர் ஸ்பின்னிங் மூலம் உற்பத்தி செய்கிறது.

உற்பத்தி தளம்

உற்பத்தி தளம்

சுபலட்சுமி பாலியஸ்டர்ஸ் குஜராத் மாநிலத்தின் தஹேஜ் மற்றும் சில்வாசா (தாத்ரா மற்றும் நகர் ஹவேலி) ஆகிய இடங்களில் இரண்டு உற்பத்தி தளத்தை வைத்துள்ளது. SPTex தஹேஜில் ஒரு நூல் உற்பத்தி தளத்தைக் கொண்டுள்ளது.

சத்தமில்லாமல் சொத்தை பிரித்த முகேஷ் அம்பானி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani Expanding Polyesters business: Reliance is acquiring Shubhalakshmi Polyesters for 1600 crores

Mukesh Ambani Expanding Polyesters business: Reliance is acquiring Shubhalakshmi Polyesters for 1600 crores

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.