கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில், 23 அடி உயரத்தில் பஞ்சலோக நடராஜர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், கும்பகோணத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் வரதராஜன் என்பவர் கின்னஸ் சாதனை செய்யும்பொருட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு 6 அடி பீடத்துடன் 17 அடி உயரம், 15 ஆயிரம் கிலோ எடை கொண்ட நடராஜர் சிலையை செய்யும் பணியை துவக்கினார்.
வேலூர் நாராயணி பீடத்தின் நிதி உதவியுடன், 15 சிற்பக்கலைஞர்கள் இரவு பகலாக பணியாற்றி உருவாக்கிய இந்த சிலையை, ராட்சத கிரேன்கள் மூலம் பீடத்தில் நிறுவும் பணி இன்று தொடங்கப்பட்டது.
நாளை நடைபெறவிருக்கும் பூர்வாங்க பூஜையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொள்கிறார். வரதராஜன் உருவாக்கிய சிலைகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.