நாம் காலை நேரத்தில் சோம்பலாக இருப்பதால், குளிக்காமலே நாம் காலை உணவை எடுத்துக்கொள்வோம். இதனால் சாப்பிட பிறகு குளிப்போம். சாப்பிட்ட பிறகு குளிப்பதால், உணவு செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். இந்நிலையில் ஆயுர்வேத முறையில் இது தொடர்பாக அதிக தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.
சாப்பிட்ட பின் உடனே குளித்தால், ஒட்டு மொத்த ரத்த ஓட்டமும் தடைபட வாய்ப்பிருக்கிறது. இதனால் உணவு செரிமாணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் சாப்பிடுவதற்கு 1 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பாக குளிக்க வேண்டும்.
இதுபோலவே ஆங்கில மருத்துவமும், சாப்பிட்டபின் உடனடியாக குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. எப்போதும் குளிக்க செல்லும்போது, சிறிது சூடான தண்ணீரில் குளிப்பது நல்லது என்று கூறப்படுகிறது. இதனால் நமது நரம்பு மண்டலம் ஓய்வாக உணர்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டப்படுகிறது. மேலும் நமது வியர்வையை வெளியேற்றும் உறுப்புக்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil