புதுடில்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (செப்.,11) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்கள் https://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் தங்களது மதிப்பெண்களை அறிந்துக்கொள்ளலாம். அதில், மும்பை ஐஐடி மண்டலத்தை சேர்ந்த ஆர் கே ஷிஷிர் 360க்கு 314 மதிப்பெண்கள் எடுத்து முதல் மதிப்பெண்கள் பெற்றார். பெண்கள் பிரிவில் டில்லி ஐஐடி மண்டலத்தை சேர்ந்த தனிஷ்கா காப்ரா 277 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். இந்த தேர்வு கடந்த ஆக., 28 அன்று காலை மற்றும் மாலையில் தேர்வு நடந்தது.
புதுடில்லி: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்